தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி சீசன் நிறைவு..! இவ்வாண்டு 923 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி!

கோவை: தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி சீசன் கடந்த நான்கு நாட்களுக்கு முன் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு 923 கோடி யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.


கோவை: தமிழகத்தில் காற்றாலை மின் உற்பத்தி சீசன் கடந்த நான்கு நாட்களுக்கு முன் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த ஆண்டு 923 கோடி யூனிட் மின்சாரம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் மின் தேவையை பூர்த்தி செய்வதில் மரபுசாரா எரிசக்தித் துறை முக்கிய பங்கு வகிக்கிறது. காற்றாலை மின் உற்பத்தி துறையின்கீழ் நாடு முழுவதும் 37 ஆயிரம் மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் அளவுக்கு கட்டமைப்பு வசதிகள் உள்ளன.

காற்றாலை மின் உற்பத்தியில் தமிழகம் தேசிய அளவில் சிறந்து விளங்குகிறது. தமிழகத்தில் 18 ஆயிரம் காற்றாலைகள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் 9,300 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் கட்டமைப்பு வசதிகள் உள்ளன. ஆண்டுதோறும் காற்றாலை சீசன் மே கடைசி வாரத்தில் துவங்கி செப்டம்பரில் நிறைவடையும்.

இந்நிலையில், நடப்பு ஆண்டுக்கான சீசன் கடந்த 4 சீசன் கடந்த 4 நாட்களுக்கு முன் நிறைவடைந்துள்ளது.

இது குறித்து இந்திய காற்றாலை மின் உற்பத்தியாளர்கள் சங்கத்தின்(IWPA) தலைவர் கஸ்தூரி ரங்கையன் கூறியதாவது:

இவ்வாண்டு காற்றாலை மின் உற்பத்தி சீசன் மே 20ல் துவங்கிய நிலையில், அக்டோபர் 25ல் நிறைவடைந்துள்ளது. கடந்த ஆண்டு 918 கோடி யூனிட் மின்சாரம் சீசனில் உற்பத்தி செய்யப்பட்டது. இவ்வாண்டு 923 கோடி யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு காற்றாலை சீசனும் நன்றாக இருந்தது. தவிர தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் காற்றாலைகள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மின்சாரத்தை நல்ல முறையில் பெற்று கொண்டது." இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...