மக்களிடம் கொரோனா நோய் எதிர்ப்பு சக்தி உள்ளதா, என கண்டறியும் எந்திரம் கோவைக்கு வந்துள்ளதாக, அதிகாரிகள் தகவல்

கோவை: கோவை உள்பட 5 மாவட்டங்களில் சேகரிக்கப்படும் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ய 2 கோடியில் நவீன எந்திரம் வைக்கப்பட்டு உள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை உள்பட 5 மாவட்டங்களில், கொரோனா நோய் எதிர்ப்புச் சக்தியை கண்டறிய, மக்களிடம் சேகரிக்கப்படும் ரத்த மாதிரிகளை பரிசோதனை செய்ய 2 கோடியில் நவீன எந்திரம், கோவையில் வைக்கப்பட்டு உள்ளதாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகம் முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், வைரசின் தாக்கத்தை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு சக்தி மக்களிடம் உள்ளதா..? (Sero Survey) என்பதை ஆய்வு செய்வதற்காக சுகாதாரத்துறை சார்பில் பொது மக்களிடம் இருந்து இரத்த மாதிரிகள் கடந்த 19ம் தேதி முதல் நான்கு நாட்கள் சேகரிக்கப்பட்டன.

அதன்படி, கோவை மாவட்டத்தில் 42 இடங்களில் ரத்த மாதிரிகள் பொதுமக்களிடம் இருந்து எடுக்கப்பட்டு, கோவை மாநகராட்சி பகுதியில் 12 இடங்களிலும், நகராட்சி பகுதிகளில் 10 இடங்களிலும், பேரூராட்சியில் 11 இடங்களிலும், ஊராட்சிகளிலும் பொது இடங்களிலும் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டன. ஒரே இடத்தில் 30 பேர் வீதம் மொத்தம் 1260 பேரிடம் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், கடந்த காலங்களில் ரத்த மாதிரிகளை சென்னைக்கு அனுப்பிதான் பரிசோதனை நடத்தப்பட்டது. ஆனால், தற்போது கோவை பந்தய சாலையில் உள்ள சுகாதாரத்துறை துணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள ஆய்வகத்தில் ரத்த மாதிரிகள் ஆய்வு செய்யப்பட உள்ளது.

இது குறித்து சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகளை, கோவையில் உள்ள ஆய்வகத்தில் பரிசோதிக்கப்படும். இதற்காக 2 கோடி செலவில் நவீன எந்திரம் புதிதாக வாங்கப்பட்டுள்ளது. அந்த எந்திரம் பம்பாயில் இருந்து கேரள மாநிலம் கொச்சிக்கு வந்து,நேற்று கோவைக்கு கொண்டு வரப்பட்டது. இரத்த மாதிரிகளை பரிசோதனை செய்யும் பணி அடுத்து வாரம் முதல் தொடங்கும்.



புதிய எந்திரத்தில், பத்து நிமிடத்திற்கு ஒரு முறை 50 ரத்த மாதிரிகளை அளித்தால் அது தொடர்ந்து பரிசோதித்து முடிவுகளை அளிக்கும். அந்த எந்திரம் தினமும் 2,000 முதல் 5000 வரை ரத்த மாதிரிகளை பரிசோதிக்கும் திறன் கொண்டது .

கோவை உள்பட 5 மாவட்டங்களில் சேகரிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் புதிய எந்திரத்தில் பரிசோதித்து உடனுக்குடன் முடிவுகள் அறிவிக்கப்படும். இதன் மூலம் கோவை மக்களிடம் கொரோனா எந்த அளவுக்கு பரவியுள்ளது, என என்பது உடனே தெரிந்துவிடும், இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...