கோவை சிங்காநல்லூர்‌ குளக்கரையில்‌ மாநகராட்சி ஆணையர் நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட சிங்காநல்லூர்‌ குளக்கரையில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ இன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலத்திற்குட்பட்ட சிங்காநல்லூர்‌ குளக்கரையில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ இன்று நேரில்‌ பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



கோவை மாநகராட்சியை ஒட்டியுள்ள குளங்களை அரசு மற்றும்‌ மாநகராட்சி தன்னார்வ அமைப்பினருடன்‌ இணைந்து முழு அளவில்‌ குளங்களில்‌ நீர் தேக்கி வைக்கக்கூடிய சூழலில், சிங்காநல்லூர்‌ குளம்‌ சுமார்‌ 288 ஏக்கர்‌ சுற்றளவில்‌ அமைந்துள்ளது. மாநகராட்சியானது சிங்காநல்லூர்‌ குளத்தை 2017-ம்‌ ஆண்டு முதல்‌ நகர்ப்புற பல்லுயிர் பாதுகாப்பு மண்டலமாக அறிவித்து பாதுகாத்து வருகிறது.

சிங்காநல்லூர்‌ குளம்‌ சுற்றுச்சூழலுடன்‌ கூடிய குளமாக பராமரிக்கப்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம்‌ மாநகராட்சியுடன்‌ இணைந்து கியூப்‌ என்ற நிறுவனம்‌ இந்த பணியினை செய்து வருகிறது.



சிங்காநல்லூர்‌ குளம்‌ முழு அளவில்‌ நீரை கொள்ளளவு கொண்டு வருவதற்கும்‌, பல்வேறு உயிரினங்களை பராமரிக்கவும்‌ ஒரு சரணாலயம்‌ என்று சொல்லும்‌ அளவிற்கு தன்னார்வ அமைப்பினருடன்‌ இணைந்து குளத்தின்‌ கரைப்‌ பகுதிகளில்‌ பல வகையான மரங்கள்‌ வளர்க்கப்பட்டு, பலவகையான பறவைகள்‌, பூச்சி இனங்கள்‌ வாழும் சூழலுக்கேற்ப அமைந்துள்ளது.



இந்நிலையில், இந்த குளத்தினை பார்வையிட்ட ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ அங்கு வளர்க்கப்பட்டு வரும்‌ தாவரங்களின்‌ வகைப்பாட்டினை கேட்டறிந்தும்‌, பறவைகள்‌ மற்றும்‌ பூச்சி இனங்கள்‌ வாழ்வதற்கான சூழலைக் கேட்டறிந்தும்‌, குளக்கரையினை சுற்றி சுமார்‌ 2 கி.மீ தொலைவிற்கு நடந்து சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.



இந்த ஆய்வின் போது, மாநகரப்‌ பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, கிழக்கு மண்டல உதவி ஆணையர்‌ முருகன்‌, உதவி செயற்பொறியாளர்‌ பிரபாகரன்‌, மண்டல சுகாதார அலுவலர்‌ சந்திரன்‌, உதவிப்‌ பொறியாளர்‌ சரவணன்‌ மற்றும்‌ தன்னார்வ அமைப்பினர்கள் ஆகியோர்‌ உடனிருந்தனர்‌.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...