கோவை: கோவையில் காங்கிரஸ் கட்சி சார்பாக நடைபெற்ற காந்திய மக்கள் யாத்திரையில் மகாத்மா, பாரதியார் போன்ற தேசிய தலைவர்களை நினைவு கூறும் விதமாக அவர்களை போல வேடமணிந்தபடி ஊர்வலமாக சென்றனர்.

காந்திய சிந்தனையை பொது மக்களிடையே கொண்டு சேர்க்கும் விதமாக கோவை மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பாக கடந்த 18ம் தேதி காந்திய மக்கள் யாத்திரை துவங்கியது.
ஒவ்வொரு நாளும் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட ஒவ்வொரு வார்டுகளில் நடைபெற்று வரும் இதில் காந்திய சிந்தனைகளைப் பரப்பும் விதமாக பாடல்கள், சொற்பொழிவுகள் போன்ற நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.
இந்நிலையில், 25வது வார்டு பகுதிக்கு உட்பட்ட தெப்பகுளம் மைதானத்தில் இருந்து துவங்கிய காந்திய மக்கள் யாத்திரையை அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாளருமான சஞ்சய்தத் துவக்கி வைத்தார்.

இதில் மகாத்மா, பாரதியார் போன்ற தேசிய தலைவர்களின் வேடம் அணிந்தவர்கள் ஊர்வலமாக சென்றனர்.

தமிழக காங்கிரஸ் கட்சியின் மாநில செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இதில், தேசிய உணர்வூட்டும் நாட்டுப்பற்று பாடல்கள் பாடி, காந்திய சிந்தனைகள் அச்சிடப்பட்ட துண்டுப் பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன.