கோவை மாநகராட்சி ஆணையர் தலைமையில் குடிநீர்‌ அபிவிருத்தி பணிகள்‌ மற்றும்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகள்‌ மற்றும்‌ சாலைப்பணிகள்‌ குறித்து ஆய்வுக்‌ கூட்டம்‌!

கோவை: கோவை மாநகராட்சி ஆணையர் தலைமையில் குடிநீர்‌ அபிவிருத்தி பணிகள்‌ மற்றும்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகள்‌ மற்றும்‌ சாலைப்பணிகள்‌ குறித்து துறைசார்ந்த அலுவலர்களுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ நடைபெற்றது.


கோவை: கோவை மாநகராட்சி, பிரதான அலுவலகக்‌ கூட்டரங்கில்‌ குடிநீர்‌ அபிவிருத்தி பணிகள்‌ மற்றும்‌ பாதாள சாக்கடை திட்டப்பணிகள்‌ மற்றும்‌ சாலைப்பணிகள்‌ குறித்து மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌ தலைமையில்‌ துறைசார்ந்த அலுவலர்களுடன்‌ ஆய்வுக்‌ கூட்டம்‌ இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்தில்‌ மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ தெரிவித்ததாவது,

கோவை மாநகராட்சிக்குட்பட்ட குறிச்சி மற்றும்‌ குனியமுத்தூர்‌ பகுதிகளில்‌ தமிழ்நாடு குடிநீர்‌ வடிகால்‌ வாரியத்தால் மேற்கொள்ளப்பட்டு வரும்‌ குடிநீர் அபிவிருத்தி பணிகள்‌, பாதாள சாக்கடை பணிகள்‌ நடைபெற்று வருகிறது.

எனவே, சாலைகள்‌ சீரமைப்பு பணிகள்‌ மற்றும்‌ குடிநீர் குழாய்‌ இணைப்பு பணிகளை துரிதமாகவும்‌, தரமானதாகவும்‌ முடிக்குமாறு சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்திய ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌, பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும்‌ பணிகளையும்‌, போக்குவரத்திற்கு இடையூறு இல்லாமல்‌ சாலைகள்‌ செப்பனிடும்‌ பணிகளையும்‌ உடனுடக்குடன்‌ தொய்வின்றி மேற்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட அலுவலா்களுக்கு மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌ அறிவுறுத்தினார்.



இந்த ஆய்வுக்கூட்டத்தில்‌ துணை ஆணையாளர்‌ எஸ்‌.மதுராந்தகி, மாநகரப்‌ பொறியாளர்‌ ஆ.லட்சுமணன்‌, செயற்பொறியாளர்‌ ஞானவேல்‌, தமிழ்நாடு குடிநீர் வடிகால்‌ வாரிய நிர்வாகப்‌ பொறியாளா்கள்‌ லட்சுமணன்‌ மற்றும்‌ அண்ணாதுரை, எல்‌.என்‌.டி. நிறுவன திட்டமேலாளர்‌ இராஜாசுரேஷ்‌ மற்றும்‌ தெற்கு மண்டல உதவி பொறியாளா்கள்‌ கலந்து கொண்டனர்.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...