திருப்பூர்: தமிழகத்தில் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டால் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில முடியும் என திருப்பூரில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூரில் கோவை, திருப்பூர், ஈரோடு மற்றும் நீலகிரி ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள 571 தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் ஆணைகளை வழங்கும் நிகழ்வில் மாநில கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கு பின்னர் மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் வகையில் தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கப்பட்டு உள்ளதாகவும், இந்தியாவில் எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழக மாணவர்களின் மருத்துவ கனவை நனவாக்கும் வகையில் தமிழக முதல்வர் கொண்டு வந்துள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீடு காரணமாக 300க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்வி பயில முடியும் எனவும் தெரிவித்தார்.
மேலும், பள்ளிகள் திறப்பது குறித்து இதுவரை எந்த ஒரு கருத்தும் முதல்வரிடம் தெரிவிக்கவில்லை எனவும் இருப்பினும் வருவாய்த்துறை மக்கள் நல்வாழ்வுத் துறை மற்றும் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து இதுகுறித்து முதல்வர் அறிவிப்பார் எனவும் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள், பள்ளி கல்வித்துறை அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.