கோவை கிணத்துக்கடவில் நகர பொறுப்பில் இருந்த கட்சி நிர்வாகிகள் நீக்கத்தைக் கண்டித்து திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டம்!

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவில் நகர பொறுப்பில் இருந்த, கட்சி நிர்வாகிகள் நீக்கத்தை கண்டித்து, திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள கிணத்துக்கடவில் நகர பொறுப்பில் இருந்த, கட்சி நிர்வாகிகள் நீக்கத்தைக் கண்டித்து, திமுகவினர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை தெற்கு மாவட்டம் முழுவதும் திமுகவின் நிர்வாக வசதிக்காக நகரம், ஒன்றியம் என பிரிக்கப்பட்டு, புதிய பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்,

இந்நிலையில், கிணத்துக்கடவு நகர பொறுப்பில் இருந்த நிர்வாகிகளை, ஒட்டுமொத்தமாக நீக்கிவிட்டு, புதிய நிர்வாகிகள், பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.



இதனால் சுமார் 40 ஆண்டுகளாக திமுக கட்சிக்காக பாடுபட்ட நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்து, எந்த ஒரு விசாரணையும் நடத்தாமல் கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதைக் கண்டித்து இன்று கிணத்துக்கடவில் திமுகவினர் திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



சுமார் 20 முதல் 40 ஆண்டுகள் வரை திமுக கட்சிக்காக பாடுபட்ட எங்களுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு தான் கட்சியில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வெற்றிக்கு பாடுபட்ட எங்களை எந்தவித விசாரணையும் நடத்தாமல் கட்சிப் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டது வருத்தம் அளிப்பதாக தெரிவித்தனர்.

எனவே, கட்சித் தலைமை உரிய விசாரணை நடத்தி பொறுப்பை அளிக்க வேண்டும் என்று உண்ணாவிரதத்தில் ஈடுபட்ட திமுகவினர் தெரிவித்தனர். கட்சிப் பொறுப்பு பறிக்கப்பட்டதைக் கண்டித்து உண்ணாவிரதப் போராட்டத்தை திமுகவினரே நடத்தியது அக்கட்சியின் இடையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...