கோவை: கோவை குனியமுத்தூரைச் சேர்ந்த 19 வயது மாணவி அளித்துள்ள புகாரின் பேரில், அவர் பள்ளியில் பயின்ற போது அவருக்கு ஆபாச செய்தி அனுப்பிய ஆசிரியர் மீது இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு போக்சோ சட்டின் கீழ் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

தனியார் கல்லூரியில் இளங்கலை இரண்டாமாண்டு படித்து வரும் 18 வயதுடைய மாணவி, கோவை இராமநாதபுரத்திலுள்ள அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒரு புகார் மனுவை அளித்துள்ளார். அதில், அவர் பள்ளியில் படிக்கும்போது, திறன் மேம்பாடு மற்றும் ஆங்கில புலமை குறித்து சாமுவேல் ஜெய்சங்கர் (39) என்ற ஆசிரியர் பாடம் நடத்தி வந்த நிலையில், மாணவிகளின் செல் போன் எண்களை வாங்கியவர், திறன் மேம்பாடு மற்றும் ஆங்கில புலமை குறித்த தகவல்களை அனுப்பி வந்துள்ளார்.
இதனையடுத்து, அந்த ஆசிரியர், புகார் அளித்துள்ள மாணவியின் அலைபேசிக்கு ஆபாச தகவல்கள் மற்றும் புகைப்படங்களை அனுப்பி வந்ததால், அவரது எண்ணை மாணவி, துண்டித்துள்ளார். இதனையடுத்து, கடும் மன உளைச்சலில் இருந்த மாணவி, யாரிடமும் ஒன்றும் சொல்லாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், தற்போது போஸ்கோ சட்டத்தில் எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளை அறிந்து, 9 ஆண்டுகளுக்கு முன்பு தனக்கு நேர்ந்த பிரச்சனைகள் குறித்து இராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனையடுத்து, காவல் துறையினர் சாமுவேல் ஜெய்சங்கரை விசாரித்து அவரை போஸ்கோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையிலடைத்தனர்.
9 ஆண்டுகளுக்கு முன்பு ஆபாச குறுங்செய்தி மற்றும் புகைப்படம் அனுப்பிய ஆசிரியர் கைது செய்யப்பட்டிருப்பது என்பது குறிப்பிடத்தக்கது.