கோவை பட்டுக்கூடு அங்காடியில் 1.59 லட்சம் கிலோ வெண் பட்டுக்கூடுகள் விற்பனை!

கோவை: கோவை பட்டுக்கூடு அங்காடியில் கடந்த 6 மாதத்தில் 1.59 லட்சம் கிலோ வெண் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை பட்டுக்கூடு அங்காடியில் கடந்த 6 மாதத்தில் 1.59 லட்சம் கிலோ வெண் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

கோவை, பாலசுந்தரம் சாலையில் பட்டுக்கூடு அங்காடி செயல்பட்டு வருகிறது. கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் பட்டுக்கூடு உற்பத்தியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அறுவடை செய்யப்படும் வெண் பட்டுக்கூடுகளை கோவைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

விவசாயிகள் உற்பத்தி செய்து கொண்டுவரும் பட்டுக்கூடுகள் அங்காடிகளில் வைக்கப்பட்டு அதிகாரிகளால் ஏலம் அறிவிக்கப்படும். கர்நாடக மாநிலம், ராம்நகர் மத்திய பட்டுக்கூடு கொள்முதல் மையத்தின் அடிப்படையில் விலை நிர்ணயிக்கப்படும். ஏலத்தில் சர்வோதயா சங்கங்கள், தனியார் ரீலர்கள் பங்கேற்று அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதல் விலையை அளித்து பட்டுக்கூடுகள் கொள்முதல் செய்கின்றனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக மார்ச் இறுதியிலும், ஏப்ரல், மே மாதத்தில் முதல் இரண்டு வாரங்களும் தமிழகம் முழுவதும் பட்டுக்கூடு அங்காடிகள் அடைக்கப்பட்டன. பின்னர் மே மாதத்தின் இரண்டாவது வாரத்தில் இருந்து பட்டுக்கூடு அங்காடி செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 6 மாதத்தில் கோவை பட்டுக்கூடு அங்காடியில் 1.59 லட்சம் கிலோ வெண் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து கோவை மாவட்ட பட்டு வளர்ச்சித் துறை உதவி இயக்குநர் அப்துல் பாரூக் கூறியதாவது:

இந்த நிதியாண்டில் கோவைக்கு 3.1 லட்சம் கிலோ கூடுகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல், மே மாதங்களில் அங்காடி அடைக்கப்பட்டிருந்ததால் கூடுகள் விற்பனை செய்ய முடியாத நிலை இருந்து வந்தது. விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் ஒப்புதலுடன் மே மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து கூடுகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கடந்த 6 மாத காலத்தில் 1.59 லட்சம் கிலோ கூடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டு முடிவுக்குள் இலக்கினை விட கூடுதல் கூடுகள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கேற்றாற்போல் தற்போது பட்டுக் கூடுகளின் வரத்தும் அதிகரித்துள்ளது. நாளொன்றுக்கு சராசரியாக 1 டன் கூடுகள் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும், தமிழகத்தில் முதன்மையாக இருக்கும் தருமபுரி பட்டுக்கூடு அங்காடியை விட கோவை அங்காடி முன்னிலையில் உள்ளது. பட்டுக்கூடுகளின் விலையும் தற்போது உயர்ந்துள்ளது. அதிகபட்சமாக கிலோவுக்கு ரூ.350 வரையும் கிடைக்கிறது. கூடுகளுக்கான பணமும், அதிகபட்சம் ஒரு வாரத்துக்குள் விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...