வால்பாறையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது பற்றிய ஆலோசனைக் கூட்டம்!

கோவை: வால்பாறையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது பற்றிய ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட துணை ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.


கோவை: வால்பாறையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வது பற்றிய ஆலோசனைக் கூட்டம் கோவை மாவட்ட துணை ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது.

கோவை மாவட்டம் வால்பாறையில் கடந்த ஆண்டுகளில் பெய்த பருவமழையின் போது ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் ஆற்றோரப்பகுதி வாழ் பொதுமக்களின் வீடுகளில் வெள்ள நீர் புகுந்து பெரும் அவதிக்குள்ளாகி வந்தனர்.

இந்நிலையில், பேரிடர் மேலாண்மை மீட்பு குழு மூலம் சம்பந்தப்பட்ட அனைத்து துறை சார்ந்த அதிகாரிகளும் துரித நடவடிக்கை மேற்கொண்டு தகுந்த பாதுகாப்பு அளித்து வந்தனர்

இந்த நிலையில், நகராட்சி மூலம் ஆறுகள் அனைத்தும் தூர்வாரப்பட்டு தற்போது பொதுமக்கள் அச்சமின்றி இருந்து வருகின்றனர். மேலும், வருகின்ற வட கிழக்கு பருவமழை காலங்களில் ஆற்றோரம் பகுதி மக்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாதவாறு அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அப்பகுதிகள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதில் துணை ஆட்சியர் பாலகிருஷ்ணன் வட்டாட்சியர் ராஜா முன்னிலையில் வால்பாறை வாழைத்தோட்டம், சிறுவர் பூங்கா, டோபிகாலனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்குச்சென்று ஆய்வு மேற்கொண்டு அப்பகுதி வாழ் மக்களிடம் சம்பந்தப்பட்ட ஆற்றோரம் பகுதிகளின் நிலை பற்றி கேட்டறிந்தார்.



பின்னர் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களிடம் பேரிடர் காலங்களில் எடுக்கக்கூடிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் அதற்கான ஆலோசனைகளையும் வழங்கினார்.

மேலும், வால்பாறை பகுதியில் பேரிடர் காலங்களில் தகவல் அளிக்க முடியாதவாறு தொலைத் தொடர்பு கிடைக்காமல் போனாலும் யாரும் அச்சம் கொள்ளாமல் உடனே உதவக்கூடிய உதவி மைய எண் 1077 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என்றும் கூறினார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வருவாய்த்துறை, நகராட்சி துறை, தீயணைப்புத் துறை, வனத்துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் தன்னார்வலர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...