திருப்பூர்: திருப்பூரில் நான்கு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆசிரியர் பணி நியமனத்திற்கான வயது வரம்பை 40 ஆக குறைத்து தமிழக அரசு வெளியிட்டுள்ள விதித்திருத்தம் மற்றும் அரசாணையால் ஆசிரியர் பயிற்சி முடித்த லட்சக்கணக்கானோர் ஆசிரியர் பணிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.

எனவே, தமிழக அரசு இந்த அரசாணையை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும், கடந்த ஆண்டு ஜனவரியில் நடைபெற்ற ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதற்காக ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக அவர்களின் ஓய்வு ஊதியம், பதவி உயர்வு உள்ளிட்டவற்றை பெற முடியாமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே அந்த நடவடிக்கையை திரும்பப் பெற வலியுறுத்தியும் உள்ளிட்ட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.