நீலகிரி: உச்சநீதிமன்ற உத்தரவுபடி முதுமலை புலிகள் காப்பகம் வெளி மண்டல வனப்பகுதியில் உள்ள யானைகள் வழித்தடத்தில் உள்ளவர்கள் நான்கு மாதங்களுக்குள் ஆட்சேபனை வழங்கலாம் எனவும் விசாரணை முடிய தற்போதைக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது என சிறப்பு குழு நீதிபதி வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

நீலகிரி மாவட்டம் முதுமலை அருகிலுள்ள மசினகுடி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் யானைகள் வழித்தடத்தை ஆக்கிரமித்து தங்கும் விடுதிகள் மற்றும் ஏராளமான கட்டுமானங்கள் எழுந்ததால், யானைகளின் வழித்தடங்கள் சுருங்கின.
இதனை தொடர்ந்து, சூழலியல் செயற்பாட்டாளர்கள் யானை வழித்தடத்தை மீட்க நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். நீலகிரி மாவட்டம் சோலூர், பொக்காபுரம், மாவனல்லா, வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகள் யானைகள் அதிகம் பயன்படுத்தும் பகுதிகளாகக் கண்டறியப்பட்டன.
மேலும், முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிவட்டப் பகுதிகளில் சொகுசு விடுதிகள் அதிகளவில் செயல்பட்டு வந்தன. குடியிருப்புக்கான அனுமதி பெற்று தங்கும் விடுதி நடத்தப்பட்டு வருவதாகவும் இவற்றில் சில கட்டிடங்கள் எவ்வித அனுமதியும் பெறாமல் சட்ட விரோதமாக செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், யானை வழித்தடத்தில் கட்டப்பட்ட ரிசார்ட்டுகளை இடிக்க சென்னை உயர் நீதிமன்றம் 2011ம் ஆண்டு ஜூலை 12ம் தேதியன்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து தங்கும் விடுதி உரிமையாளர்கள் உச்ச நீதிமன்றத்தை அணுகினர்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்த நிலையில் மசினகுடி, பொக்காபுரம் உட்பட்ட பகுதிகளில் 38 கட்டிடங்கள் யானைகள் வழித்தடத்தில் கட்டப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிக்கை தாக்கல் செய்தது. அந்தக் கட்டிடங்களுக்கு சீல் வைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, இந்த கட்டிடங்களுக்கு கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாவட்ட நிர்வாகம் சீல் வைத்தது. இந்த நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்து, 3 நபர் கொண்ட குழு அமைத்தது.
இதில் சென்னை உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி கே.வெங்கட்ராமன் தலைமையில், தேசிய யானைகள் பாதுகாப்பு திட்ட தொழில்நுட்பக்குழு உறுப்பினர் அஜய் தேசாய் மற்றும் தேசிய வன உயிரின வாரிய முன்னாள் உறுப்பினர் பரவீன் பார்கவா ஆகியோர் அடங்கிய 3 நபர் குழுவை உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது.
இந்த சிறப்பு குழுவின் நீதிபதி வெங்கட் ராமன் இன்று உதகையில் செய்தியாளர்களை சந்தித்த போது, விசாரணையை முடிக்க காலக்கெடு நிர்ணயிக்க முடியாதென்றும், ஆட்சேபனைகளை பதிவு செய்ய மட்டும் நான்கு மாதங்கள் கெடு விதிப்பதாக தெரிவித்தார்.