இந்திய விமானப் படை உள்ளிட்ட அமைப்புகளுடன் கோவை கொடிசியா ராணுவ புத்தாக்க மற்றும் அடல் தொழில் வளர்ப்பு மையம் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

கோவை: கோவை கொடிசியா ராணுவ புத்தாக்க மற்றும் அடல் தொழில் வளர்ப்பு மையம் தனது செயல்பாடுகளை துவங்கும் விதமாக இந்திய விமானப் படை உள்ளிட்ட அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.


கோவை: கோவை கொடிசியா ராணுவ புத்தாக்க மற்றும் அடல் தொழில் வளர்ப்பு மையம் தனது செயல்பாடுகளை துவங்கும் விதமாக இந்திய விமானப் படை உள்ளிட்ட அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

கொடிசியா ராணுவ புத்தாக்கம் மற்றும் அடல் தொழில் வளர்ப்பு மையமானது மத்திய அரசால் உருவாக்கப்பட்டு, ஒரு தொழில் அமைப்பு மூலமாக துவங்கப்பட்ட இந்தியாவின் முதலாவது மையமாகும்.

தென்னக ராணுவத் தளவாட தொழில் வழித்தடத்திற்கு பங்களிப்பை வழங்குவதில் இந்த மையம் முக்கிய பங்காற்றி வருகிறது.

பாரத பிரதமரின் "ஆத்ம நிர்பார் பாரத்" அழைப்பின்படி ராணுவத் தளவாட உற்பத்திப் பொருட்கள் மற்றும் உதிரி பாகங்களை உள்நாட்டிலேயே தயாரிப்பதற்காக இந்த மையம் செயல்பட உள்ளது.

கொடிசியா ராணுவ புத்தாக்க மையம் மற்றும் அடல் தொழில் வளர்ப்பு மையம் தனது செயல்பாடுகளைத் தொடங்கும் விதமாக கொச்சியிலுள்ள நேவல் ஷிப் ரிப்பேர் யார்டு (Naval Ship Repair Yard), கோவை சூலூரில் அமைந்துள்ள 5 பி.ஆர்.டி, இந்திய விமானப் படை ஆகிய அமைப்புகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இன்று கையெழுத்திட்டது.

இந்த விழா காணொலி காட்சி மூலம் கோவை அவினாசி சாலையில் உள்ள தனியார் கலையரங்கத்தில் நடைபெற்றது. இந்திய அரசின் பாதுகாப்புத் துறை செயலாளர் டாக்டர் அஜய்குமார் இதற்கு தலைமை வகித்தார்.

இந்நிகழ்ச்சியில் கொடிசியா தலைவர் ராமமூர்த்தி பேசியதாவது:

இந்த மையத்தின் மூலமாக ராணுவம் மற்றும் உள்நாட்டு தேவைகளை நிறைவு செய்கின்ற புதிய தொழில் திட்டங்களை கொண்டுள்ள புதிய மற்றும் ஏற்கனவே இயங்கி வருகின்ற தொழில்முனைவோர்களுக்கு ஆதரவு தந்து வழிநடத்த முடியும். முதல் ஆண்டில் குறைந்தது 10 தொழில் முனைவோரை வளர்த்தெடுக்கும் விதமாகவும், வரும் காலத்தில் ஆண்டுக்கு ஐந்து தொழில்முனைவோர்களை உருவாக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

உள்நாட்டிலேயே தயாரிப்பு சார்ந்து சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் எளிதாக இயங்குவதற்கு ஏதுவாகவும், முப்படைகள், பாதுகாப்பு துறை சார்ந்த அமைப்புகளின் தேவைகள் குறித்த செய்திகளை பரிமாற்றிக்கொள்ளும் விதமாகவும், ஒரு ஒற்றைச் சாளர முறை தகவல் மையம் கொடிசியாவில் அமைக்கப்படுகிறது. இந்த மையத்தின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு வழிகாட்டுவதற்காக தர கட்டுப்பாடு இயக்குனரகத்திலிருந்து நியமிக்கப்படும் ஒரு ஒருங்கிணைப்பு அதிகாரி செயல்படுவார். இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் கொடிசியா ராணுவ புத்தாக்கம் மற்றும் அடல் தொழில் வளர்ப்பு மைய இயக்குனர் சுந்தரம், ஏர் கமாண்டர் ஸ்ரீகுமார், ரியர் அட்மிரல் தீபக் பன்சால், இந்திய ராணுவ அமைச்சகத்தை சார்ந்த ஸ்ரீ சஞ்சய் ஜாஜு ஐஏஎஸ், ஸ்ரீ புனித் அகர்வால் ஐஏஎஸ் மற்றும் லெப்டினென்ட் ஜெனரல் எஸ். கே உபாத்யாய், ஏர் வைஸ் மார்ஷல் எஸ் ராமகிருஷ்ணன், மேஜர் ஜெனரல் ஆர் கே மல்ஹோத்ரா, இந்தியன் நேவி அதிகாரி ரியர் அட்மிரல் வி மோகன்தாஸ், தொழில்துறை செயலாளர், தமிழக அரசு முருகானந்தம் ஐஏஎஸ், நிட்டி ஆயோக் மிசன் இயக்குநர் ஸ்ரீ ரமணன் ராமநாதன், எம்எஸ்எம்இ, செயலாளர் கோபால், ஐஏஎஸ் உள்ளிட்ட பல்வேறு அதிகாரிகள் மற்றும் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...