கொரோனா காலத்தில்‌ 11,600 சிறை கைதிகளுக்கு ஈஷா சார்பில் யோகா பயிற்சி - 3,971 சிறை ஊழியர்கள் பங்கேற்பு!

கோவை: கொரோனா வைரஸ்‌ பாதிப்பு மிகுந்த இக்கட்டான சூழலில்‌ தமிழகம்‌ முழுவதும்‌ உள்ள அனைத்து மத்திய சிறைச்சாலைகளிலும்‌ உள்ள கைதிகள்‌ மற்றும்‌ ஊழியர்களுக்கு ஈஷா யோகா ஆசிரியர்கள்‌ ஆன்லைன்‌ மூலம்‌ யோகா கற்றுக்கொடுத்தனர்‌.


கோவை: கொரோனா வைரஸ்‌ பாதிப்பு மிகுந்த இக்கட்டான சூழலில்‌ தமிழகம்‌ முழுவதும்‌

உள்ள அனைத்து மத்திய சிறைச்சாலைகளிலும்‌ உள்ள கைதிகள்‌ மற்றும்‌ ஊழியர்களுக்கு ஈஷா யோகா ஆசிரியர்கள்‌ ஆன்லைன்‌ மூலம்‌ யோகா

கற்றுக்கொடுத்தனர்‌.

இந்த யோகா வகுப்புகள்‌ சென்னை, கோவை, மதுரை, திருச்சி, வேலூர், சேலம்‌, கடலூர்‌, பாளையங்கோட்டை உள்ளிட்ட இடங்களில்‌ இருக்கும்‌ மத்திய சிறைச்சாலைகள்‌ மற்றும்‌ பெண்களுக்கான சிறப்பு சிறைச்சாலைகளில்‌ கடந்த ஜூலை, ஆகஸ்ட்‌, செப்டம்பர்‌ ஆகிய மாதங்களில்‌ நடத்தப்பட்டது.



இதில்‌ 8,165 ஆண்‌ கைதிகள்‌, 3,453 பெண்‌ கைதிகள்‌, 3,018 ஆண்‌ ஊழியர்கள்‌, 953 பெண்‌ ஊழியர்கள்‌ உட்பட மொத்தம்‌ 15,589 பங்கேற்று பயன்பெற்றனர்‌. அவர்களின்‌ நோய்‌ எதிர்ப்பு சக்தி மற்றும்‌ நுரையீரல்‌ திறனை அதிகரிப்பதற்காக 'சிம்ம க்ரியா' என்ற பயிற்சியும்‌, உடல்‌ மற்றும்‌ மனதளவில்‌ அமைதியாகவும்‌ சமநிலையாகவும்‌ இருப்பதற்காக யோக நமஸ்காரம்‌' மற்றும்‌ ஈஷா க்ரியா' ஆகிய பயிற்சிகளும்‌ கற்றுக்கொடுக்கப்பட்டன.

அரசின்‌ வழிகாட்டுதல்‌ நெறிமுறைகளின்படி, சமூக இடைவெளியுடன்‌ தனித்‌தனி குழுக்களாக வகுப்புகள்‌ நடத்தப்பட்டது. இவ்வகுப்புகள்‌ தங்களுக்கு பெரிதும்‌ பயன்‌தரும்‌ வகையில்‌ இருந்ததாக சிறைத்‌துறை உயர்‌ அதிகாரிகள்‌ தெரிவித்தனர்‌.

தமிழகம்‌ முழுவதும்‌ உள்ள சிறைச்சாலைகளில்‌ கடந்த 28 ஆண்டுகளாக இலவச யோகா வகுப்புகளை ஈஷா யோகா மையம்‌ நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

இதேபோன்று, நீலகிரி, திருப்பூர்‌, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில்‌ பணியாற்றும்‌ காவல்துறையினருக்கும்‌ கொரோனா காலத்தில்‌ இலவச யோகா வகுப்புகள்‌ நடத்தப்பட்டது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...