நீலகிரியில் காவல்துறை வீரவணக்க வாரத்தை முன்னிட்டு பல்வேறு குற்றங்களில் ஈடுபடுபவர்களை மோப்ப நாய்களை கொண்டு கண்டறியும் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

நீலகிரி: நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் காவல்துறை வீரவணக்க வாரத்தை முன்னிட்டு பல்வேறு குற்றங்களில் ஈடுபடுபவர்களை மோப்ப நாய்கள் கொண்டு கண்டறியும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொது மக்களுக்கு நடத்தி காட்டப்பட்டன.


நீலகிரி: நீலகிரி மாவட்ட காவல்துறை சார்பில் காவல்துறை வீரவணக்க வாரத்தை முன்னிட்டு பல்வேறு குற்றங்களில் ஈடுபடுபவர்களை மோப்ப நாய்கள் கொண்டு கண்டறியும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் பொது மக்களுக்கு நடத்தி காட்டப்பட்டன.

உதகையில் அதிக அளவு சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் கூடும் தாவரவியல் பூங்கா, சேரிங்கிராஸ், உள்ளிட்ட பகுதிகளில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை கண்டறிவது, கொலை மற்றும் கொள்ளை குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகளை மோப்ப நாயின் உதவியோடு அடையாளம் காணுதல் உள்ளிட்ட செயல்முறை விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.



மேலும், காவலர்களின் வீர வணக்க வாரத்தினை முன்னிட்டு மாவட்ட காவல் துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளை மேற்கொண்டு வரும் மாவட்ட காவல் துறையினர் மோப்ப நாய் மூலம் தாங்கள் செய்யும் பணி குறித்து பொது மக்களுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தினர்.

இதில் பொதுமக்கள், வாகன ஓட்டுனர்களிடம் சில பொருட்களை மறைத்து வைத்து அவற்றை காவல் துறையின் மோப்ப நாய் அடையாளம் கண்டுபிடிப்பதை காவல் துறையினர் செய்து காண்பித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...