கோவையில் திமுக நிர்வாகி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை..!

கோவை: கோவையில் திமுக நிர்வாகி பையா கவுண்டர் (எ) கிருஷ்ணன் என்பவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது ஆதரவாளர்கள் மற்றும் திமுகவினர் அங்கு கூடியதால் பரபரப்பு.



கோவை: கோவையில் திமுக நிர்வாகி பையா கவுண்டர் (எ) கிருஷ்ணன் என்பவரது வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அவரது ஆதரவாளர்கள் மற்றும் திமுகவினர் அங்கு கூடியதால் பரபரப்பு. 

கோவை திமுக மாநகர மேற்கு மாவட்ட பொறுப்பாளராக இருந்து வருபவர் பையா கவுண்டர். ரியல் எஸ்டேட் மற்றும் விவசாயம் செய்து வரும் இவர், காளப்பட்டி பேரூராட்சி தலைவராக சுயேச்சையாக போட்டியிட்டு இரண்டு முறை வெற்றி பெற்றுள்ள, இவர் கடந்த 2010ம் ஆண்டு திமுகவில் இணைந்தார். 

இவருக்கு சொந்தமான வீடு, கோவை காளப்பட்டி பிள்ளையார் கோவில் வீதி பகுதியில் உள்ளநிலையில், இன்று வருமான வரி துறையை சேர்ந்த ஆறு பேர் கொண்ட குழு அவரது வீட்டில் சோதனை மேற்கொள்ள வந்தனர்.



ஆனால், அவர் துக்க நிகழ்ச்சிக்காக ஈரோடு சென்றிருந்ததால், வருமான வரித்துறை அதிகாரிகள் அவரது வருகைக்காக வீட்டில் காத்திருந்தனர். இந்த நிலையில், மதியம் ஒன்றரை மணியளவில் துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு அவர் வீடு திரும்பினார்.



அப்போது, அங்கு திரண்டிருந்த 30க்கும் மேற்பட்ட அவரது ஆதரவாளர்கள், பையா கவுந்தருக்கு ஆதரவாகவும், சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் முழக்கங்களை எழுப்பினர். 



இதையடுத்து, 2:45 மணி நேர காத்திருப்பிற்குப் பின்னர், இரண்டு மணியளவில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையை துவக்கினர். தொடர்ந்து, வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

கடந்த 2 நாட்களுக்கு முன்பு கோவையில் திமுக தலைவர் ஸ்டாலினை கிண்டல் செய்யும் விதமாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருந்ததை கண்டித்து, நேற்று திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்திய நிலையில், தற்போது திமுக நிர்வாகி ஒருவரது வீட்டில் வருமான வரி சோதனை நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

Newsletter

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஜூலை 15...