கோவை: கோவை நஞ்சப்பா சாலையில் குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

கோவை நஞ்சப்பா சாலை பகுதியில் அனுப்பர்பாளையம் பள்ளியின் அருகில் உள்ள சிறுவாணி குடிநீர் குழாய் உடைந்ததால் நீர் வெளியேறி அப்பகுதியில் வெள்ளப் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அவனாசி ரோடு மேம்பாலம், காட்டூர், போன்ற பகுதிகளில் சாலைகளில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகினர்.

இதையடுத்து, பார்க் கேட்டில் இருந்து அவிநாசி சாலையில் தற்காலிக தடுப்புகள் வைத்து போக்குவரத்தை மாற்றம் செய்த காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
குடிநீர் குழாயில் இருந்து வெளியேறிய நீர் அவினாசி மேம்பாலத்தின் கீழ் தேங்கியதனால் மோட்டார் பம்புகள் மூலம் தண்ணீர் வெளியேற்றப்பட்டது.

இதனை தொடர்ந்து, போக்குவரத்து சரி செய்யப்பட்டு மேம்பாலத்தின் கீழ் வாகனங்கள் அனுமதிக்கப்பட்டன. குழாய் உடைப்பு காரணமாக சுமார் இரண்டு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.