கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து நாற்பத்து மூன்று பவுன் நகை மற்றும் லேப்டாப்பை திருடிச் சென்ற கொள்ளையர்கள்..! போலீசார் விசாரணை

கோவை: கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து நாற்பத்து மூன்று பவுன் நகை மற்றும் லேப்டாப்பை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


கோவை: கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து நாற்பத்து மூன்று பவுன் நகை மற்றும் லேப்டாப்பை திருடிச் சென்ற கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சுந்தராபுரம் முத்துநகர் அருகே வேளாங்கண்ணி நகர் பகுதியில் வசித்து வருபவர் விகாஸ்(27). சாய்பாபா காலனி பகுதியில் உள்ள மருந்து நிறுவனம் ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி கர்ப்பமாக உள்ள நிலையில் பிரசவத்திற்கு தனது சொந்த ஊரான காங்கேயம் சென்று இருந்தார்.

இந்நிலையில், கடந்த 24ம் தேதி மனைவியைப் பார்க்க காங்கேயம் சென்ற விகாஸ் அங்கிருந்து நேராக பணிக்கு சென்று உள்ளார். இதனிடையே, இன்று மதியம் அருகில் வசிப்பவர்கள் வீட்டின் முன் கதவு திறந்த நிலையில், இருப்பதாக தகவல் தெரிவித்து உள்ளனர்.

இதனையடுத்து, வீட்டிற்கு சென்று பார்த்தபோது வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் வைக்கப்பட்டு இருந்த நாற்பத்து மூன்றரை பவுன் நகை மற்றும் லேப்டாப் திருடு போயுள்ளது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து, போத்தனூர் காவல் நிலையத்தில் விகாஸ் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்துள்ள குற்றபிரிவு போலீசார் கொள்ளை சம்பவத்தில ஈடுபட்ட குற்றவாளிகளை தேடி வருகின்றனர். வீட்டின் கதவு பூட்டப்பட்டு இருப்பதை நோட்டமிட்ட மர்ம நபர்கள் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

குடியிருப்புகள் உள்ள பகுதியில் நடைபெற்ற இந்த கொள்ளை சம்பவம் அருகில் வசிப்பவர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...