கோவை: கோவையில் போக்சோவில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த நபர் மீண்டும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த வயது 17 பெண் ஒருவர் கடந்த 12ம் தேதி மாயமானதை தொடர்ந்து பெற்றோர்கள் அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில், கிழக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராமநாதபுரம் ஆய்வாளர் முருகேசன் தலைமையில் தனிப்படை அமைத்து இளம்பெண்ணை தேடி வந்த நிலையில், ராமநாதபுரம் புலியகுளம் பகுதியைச் சேர்ந்த சிவகுமார் என்பவரது மகன் இன்பாண்ட் டேனியல்(25) என்பவருடன் அந்த பெண் மதுரைக்கு சென்றுள்ளதாக தகவல் கிடைக்கப் பெற்றது.
இந்த நிலையில், இன்பாண்ட் டேனியலை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே பெண்னை திருமணம் செய்ததாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த இன்பாண்ட் டேனியல் காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்துள்ளார்.
கடந்த வெள்ளிகிழமை கையெழுத்திட வராமல் அந்த பெண்னை மதுரைக்கு அழைத்து சென்று அங்கிருந்து பரமக்குடி அழைத்துச் சென்றுள்ளார். செலவிற்கு பணம் இல்லாத காரணத்தால் கோவைக்கு திரும்பிய அவரை சிங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் வைத்து போலீசார் கைது செய்தனர்.
மேலும் பெண்னை மீட்ட போலீசார் அறிவுரை கூறி பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். ஏற்கனவே போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்த இவர் மீண்டும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.