திருப்பூர்: திருப்பூரில் முறையாக சாக்கடை வசதி செய்து கொடுக்காத மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட பாண்டியன் நகர் பகுதி பொதுமக்கள் நீண்ட காலமாக சாக்கடை வசதி செய்து தரக்கோரி மாநகராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்து வந்த சூழ்நிலையில், பாண்டியன் நகர் பகுதிக்கு உட்பட்ட சில வீதிகளில் மட்டுமே சாக்கடை வசதி செய்து கொடுத்து மற்ற பகுதிகளில் எந்த பணியும் தொடங்காததை மாநகராட்சிக்கு தெரியப்படுத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து இன்று திருப்பூர்-பெருமாநல்லூர் சாலையில் பொதுமக்கள் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மாநகராட்சி நிர்வாகத்துடன் பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இதனால் திருப்பூர்-பெருமாநல்லூர் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.