Update: பொள்ளாச்சியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், உடந்தையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், உடந்தையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.



பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில், உடந்தையாக இருந்த பள்ளி தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். 

பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்து பணிமனை ஊழியர் தங்கவேல் (65), அவரது மனைவி அய்யம்மாள்(55). இவர் தலைமை ஆசிரியராக பணியாற்றும் தொடக்கப் பள்ளியில் பயிலும், ஐந்தாம் வகுப்பு மாணவிக்கு, தங்கவேல் தொடர்ந்து பாலியல் துன்புறுத்தல் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. 

இது தொடர்பாக மாணவியின் பெற்றோர்கள், பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் நேற்று முன்தினம், மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தங்கவேல் மற்றும் அதற்கு உடந்தையாக செயல்பட்ட அவரது மனைவி, தலைமையாசிரியை அய்யம்மாள் ஆகிய இருவர் மீதும் மகளிர் காவல் நிலைய போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்நிலையில், தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியை அய்யமாளை பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட கல்வித் துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பள்ளி மாணவி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் உடந்தையாக செயல்பட்ட தலைமை ஆசிரியர் குறித்து மாவட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வட்டார கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். 

இதையடுத்து, தலைமை ஆசிரியை அய்யம்மாள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...