அரியர் மாணவர்களுக்கும் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடக்கோரி கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் தேர்வு எழுதும் நூதன போராட்டம்!

கோவை: கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு இணைய வழியில் தேர்வு நடத்தியது போல, அரியர் மாணவர்களுக்கும் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடக்கோரி கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் தேர்வு எழுதும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு இணைய வழியில் தேர்வு நடத்தியது போல, அரியர் மாணவர்களுக்கும் தேர்வு நடத்தி முடிவுகள் வெளியிடக்கோரி கோவையில் இந்திய மாணவர் சங்கத்தினர் தேர்வு எழுதும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.



தமிழக அரசு அறிவித்தபடி உடனடியாக அரியர் மாணவர்களுக்கு தேர்வு முடிவை வழங்கிடுதல் அல்லது தற்பொழுது இறுதியாண்டு மாணவர்களுக்கு இணைய வழியில் தேர்வு நடத்தியதுபோல் அரியர் மாணவர்களுக்கும் தேர்வை நடத்தி உடனடியாக முடிவுகளை வெளியிடுதல், சென்னை பல்கலைக்கழகம் அறிவித்ததை போல் தேர்வு முடிவை மற்ற பல்கலைக்கழகங்களும் அறிவித்திடுதல் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.



அப்போது, தரையில் அமர்ந்து தேர்வு எழுதும் நூதன போராட்டத்திலும் ஈடுபட்டனர்.



அரியர் மாணவர்களின் நலன் கருதி உடனடியாக தேர்வு நடத்தி முடிவுகள் அறிவிக்க வேண்டும் எனவும் அதுவரை முதுகலை பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வுகளை ஒத்திவைக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...