கோவை அரசு மருத்துவமனையில் குழந்தையின் மூச்சுக் குழாயில் சிக்கிய கல்லை அகற்றி மருத்துவர்கள் சாதனை..!

கோவை: கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது ஆண் குழந்தையின் மூச்சுக் குழாயில் மாட்டிக்கொண்ட கல்லை, அரசு மருத்துவமனை மருத்துவர்கள், அறுவை சிகிச்சையின்றி பிராங்காஸ்கோபி (Pharyngoscopy) மூலம் கல்லை அகற்றியுள்ளனர்.



கோவை: கோவை அரசு மருத்துவமனையில் 2 வயது ஆண் குழந்தையின் மூச்சுக் குழாயில் மாட்டிக்கொண்ட கல்லை, அரசு மருத்துவமனை மருத்துவர்கள், அறுவை சிகிச்சையின்றி பிராங்காஸ்கோபி (Pharyngoscopy) மூலம் கல்லை அகற்றியுள்ளனர். 

திருப்பூர் மாவட்டம் மாதப்பூரை சேர்ந்தவர் முனியாண்டி கூலித்தொழிலாளி. இவரது இரண்டு வயது ஆண் குழந்தை கடந்த இரண்டு நாட்களுக்கு முன் வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, விளையாட்டுதனமாக கல்லை மூக்கினுள் நுழைந்து விட்டது. கல் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டதால் மூச்சு விட முடியாமல் தவித்துக் கொண்டிருந்தது. 

இதனைத் தொடர்ந்து, பெற்றோர்கள் குழந்தையை அருகில் உள்ள சூலூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். பின், உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைத்துள்ளனர்.

கோவை அரசு மருத்துவமனையின், காது மூக்கு தொண்டை பிரிவில் அனுமதிக்கப்பட்ட குழந்தைக்கு மேற்கண்ட பரிசோதனையில் மூச்சு குழாயில் கல் மாற்றிக் கொண்டிருப்பது தெரியவந்தது. மேலும், சுவாசக் குழாயில் நூண்ணோக்கி பிராங்காஸ்கோபி கருவி மூலம் அறுவை சிகிச்சை இல்லாமல் வெளியே எடுக்க முடிவு செய்யப்பட்டு, சிக்கியிருந்த கல் வெற்றிகரமாக அகற்றப்பட்டது. 

தற்போது, குழந்தை, எந்த சிரமம் இல்லாமல், ஆரோக்கியமாக உள்ளதாக தெரிவித்த, கோவை அரசு மருத்துவமனையின் காது மூக்கு தொண்டை பிரிவு தலைவர் அலி சுல்தான், சிகிச்சை குறித்து கூறுகையில், குழந்தையின் மூச்சுக் குழாயில் கல் அடைத்து கொண்டிருந்ததால், மூச்சுவிட முடியாமல் குழந்தை சிரமத்துக்குள்ளானது.கொஞ்சம் தாமதம் கூட,  குழந்தையின் நுரையீரலை பாதித்து, உயிருக்கே ஆபத்தான நிலை ஏற்பட்டிருக்கும், என்றார்.

குழந்தைகளை பெற்றோர்கள் கூர்ந்து கவனித்து அவர்களது நடவடிக்கைகளை ஆராயவேண்டும். குழந்தைகள் விளையாடும் போது கவனமுடன் பார்த்துக் கொள்ள வேண்டும், என்று அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...