திருப்பூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவு!

திருப்பூர்: புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.


திருப்பூர்: புதிதாக கட்டப்பட்டுள்ள திருப்பூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டார்.

திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டு, ஆறாண்டுக்குப் பின்னர் தான் நீதித்துறையில் மாவட்ட செசன்ஸ் நீதிமன்றம் உள்ளிட்டவை துவங்கப்பட்டன. ஆனால், இதற்கான உரிய கட்டிடங்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதி எதுவுமில்லை. பனியன் நிறுவனம் செயல்பட்டு வந்த குறுகலான பகுதிக்குள், குறுகிய கட்டிடத்தில் இவை இயங்கி வருகின்றன.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க வேண்டும் என்ற தொடர் கோரிக்கையை அடுத்து கடந்தாண்டு 2018 ஜூலை மாதம் இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.



திருப்பூரில் மாவட்ட அலுவலகம் பின்புறம், 10 ஏக்கர் நிலம், மாவட்ட நீதித்துறைக்கு ஒதுக்கப்பட்டது. அதில் 37 கோடி ரூபாய் மதிப்பில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைக்க திட்டமிடப்பட்டது. நீதிமன்ற கட்டிடம் ரூபாய் 37 கோடி மதிப்பில், தரை மற்றும் மூன்று தளங்களுடன் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம், 1 லட்சத்து, 66 ஆயிரத்து, 441 சதுரடி பரப்பில் அமைகிறது.



செசன்ஸ் நீதிமன்றம், இரு கூடுதல் மாவட்ட நீதிமன்றம் ஆகிய மூன்று மாவட்ட நீதிமன்றங்கள், முதன்மை குற்றவியல் நீதிமன்றம், நான்கு ஜே.எம்., நீதிமன்றம் என எட்டு நீதிமன்றங்கள் அமைகிறது. வந்து செல்வோர் வசதிக்காக எட்டு இடங்களில் லிப்ட்களும் எட்டு இடங்களில் படிக்கட்டுகளும் அமைக்கப்படுகிறது.

அத்துடன் நீதிபதிகள் அறை, ஊழியர் அறை, போஸ்ட் ஆபீஸ், பதிவு அறை, தலைமை எழுத்தர் அறை, இருப்பு அறை, நீதிமன்றம் அலுவலகம், அரசு வக்கீல்கள் அறை, சிரஸ்தார், போலீஸ் காத்திருப்பு அறை, லாக்-அப் மற்றும் கழிப்பிடம். மேலும் சிறப்பு வசதிகளாக, கண்காணிப்பு கேமராக்கள், மைக் சிஸ்டம், தீத்தடுப்பு உபகரணங்கள், ஆர்.ஓ., குடிநீர் வசதி, சோலார் மின் வசதி மற்றும் இண்டர்காம் வசதிகள் செய்யப்படுகிறது.



இந்த நிலையில், இதன் கட்டுமானப் பணி தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதனையடுத்து, இன்று சென்னை உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதி அமரேஸ்வர் பிரதாப் சாஹி திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, கட்டுமானப் பணி விரைந்து முடித்து இது செயல்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என மாவட்ட நீதிபதி அல்லி அவர்களுக்கு உத்தரவிட்டார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...