கோவை: கோவையில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவரின் வீட்டில் நுழைந்த மர்ம நபர்கள் இரண்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வெள்ளி நகைகளை திருடி சென்றுள்ளனர்.

கோவை பாப்பநாய்க்கன்பாளையம் தண்டபாணி நகர் பகுதியை சேர்ந்தவர் முரளி(50). கடந்த சில தினங்களுக்கு முன் இவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனை தொடர்ந்து அவரது வீடு தனிமைபடுத்தப்பட்டது. இவரது வீட்டின் மாடியில் குடியிருந்து வந்த வழக்கறிஞர் கீர்த்திவாசன் வீட்டை பூட்டி வெளியூர் சென்று விட்டார். சிகிச்சை முடிந்து கடந்த 16ம் தேதி வீடு திரும்பிய முரளி வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தவர், உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த உடைமைகள் சிதறி கிடப்பதை கண்டார்.
மேலும், லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 8 பவுன் தங்க நகைகள், ஒன்றரை கிலோ வெள்ளி மற்றும் 2300 ரூபாய் பணம் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடி சென்று உள்ளது தெரியவந்தது.
பின்னர், இது குறித்து முரளி பந்தய சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அவரது புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர். வீட்டில் ஆட்கள் இல்லாத நேரம் பார்த்து மர்ம நபர்கள் கொள்ளையில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.