கோவை: கோவை சின்னவேடம்பட்டி பகுதியில் அரசு வேலை கிடைக்காததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கோவை சின்னவேடம்பட்டி சுப்ரமணியன் நகரை சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகன் மனோஜ் குமார்(31). மனோஜ் குமார் கடந்த ஒரு வருடமாக எந்த வேலைக்கும் செல்லாமல் அரசு வேலைக்காக முயற்சி செய்து வந்துள்ளார்.
ஆனால், ஒரு வருடமாக அரசு வேலைக்கு முயற்சித்தும் வேலை கிடைக்காததால் மனமுடைந்த அவர், குடிபோதையில் நேற்று வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து மனோஜ்குமாரின் தந்தை துரைசாமி அளித்த புகாரின் பேரில் சரவணம்பட்டி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரசு வேலை கிடைக்காததால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.