வால்பாறையில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி கணவன் முன் மணைவி பலி ஆன சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வால்பாறை:
வால்பாறையில் இருசக்கர வாகனத்தின் மீது லாரி மோதி கணவன் முன் மனைவி பலியான சம்பவம் பெரும் சோகத்தை
ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த தோனி முடி தேயிலைத் தோட்டத்தை சேர்ந்தவர் ராமானுஜம். இவர் இங்கு மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி விமலா (42) தேயிலை தோட்ட தொழிலாளராக பணியாற்றி வருகிறார் .
இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், ராமானுஜம் மற்றும் அவர் மனைவியும் இருசக்கர வாகனத்தில் வால்பாறை மார்கெட் பகுதிக்கு அத்தியாவசிய பொருட்களை வாங்க வந்துள்ளனர். அப்போது, பொருட்களை வாங்கிகொண்டு, மதியம் அவர்கள் வசிக்கும் தோனி முடிக்கு திரும்ப சென்று கொண்டிருந்தார். அப்போது, நல்ல காத்து தேயிலை தோட்டத்தில் உள்ள சாலையில் திரும்பும்போது, எதிரே வந்த லாரி இரு சக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில், சாலையில் தூக்கி வீசப்பட்ட விமலா தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் மிதந்தார். விபத்தில், சிறு காயத்துடன் தப்பித்த, ராமானுஜம் கண்முன்னே அவர் மனைவி உயிர் பிரிந்தது.
தகவலறிந்து விரைந்து வந்த வால்பாறை காவல் உதவி ஆய்வாளர் சதீஷ், விமலாவின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக வால்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.
விபத்து குறித்து, வால்பாறை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை
மேற்கொண்டுள்ளனர். விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுனர் தலைமறைவாகி விட்டதால்,அவரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.