கோவையில் நவராத்திரி விழாவை முன்னிட்டு 4000க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகளை வைத்துள்ள அய்யப்ப பக்தர்!

கோவை: நவராத்திரி விழாவை முன்னிட்டு 4000க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் கோவையை சேர்ந்த அய்யப்ப பக்தர் காட்சிப்படுத்தி உள்ளார்.


கோவை: நவராத்திரி விழாவை முன்னிட்டு 4000க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் கோவையை சேர்ந்த அய்யப்ப பக்தர் காட்சிப்படுத்தி உள்ளார்.



நவராத்திரி விழா இன்று துவங்கி ஒன்பது நாட்கள் வெகு விமரிசையாக கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, வீடுகள் மற்றும் கோவில்களில் கொலு பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்தபடுவது வழக்கம்.



இதன் ஒரு பகுதியாக, கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வசித்து வரும் மோகன்ராஜ் என்ற அய்யப்ப பக்தர் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கொலு பொம்மைகளை தனது வீட்டின் மாடியில் காட்சிப்படுத்தி உள்ளார். வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ள இந்த கொலுவில் சிவன், முருகர், கிருஷ்ணர் உள்ளிட்ட புராண கதைகள் காட்சிப்படுத்தப்பட்டு உள்ளன.



மேலும், பிரசித்தி பெற்ற கோவில்களின் மாதிரிகள், மரபாச்சி பொம்மைகள், காய்கனிகள், சுற்றுதலங்கள், பூங்கா மாதிரிகள் உள்ளிட்ட பல்வேறு கொலு பொம்மைகள் இடம் பெற்று உள்ளன.



இது குறித்து அய்யப்ப பக்தரான மோகன்ராஜ் கூறுகையில், கடந்த 12 ஆண்டுகளாக நவராத்திரியின் போது கொலு பொம்மைகள் அமைத்து வழிபட்டு வருவதாக கூறினார். முதல் ஆண்டில் முந்நூறு பொம்மைகளுடன் கொலு அமைத்ததாகவும் தற்போது 15 லட்ச ரூபாய் செலவில் 4000க்கும் மேற்பட்ட கொலு பொம்மைகள் அமைத்துள்ளதாக தெரிவித்தார்.



மேலும் திருச்சி, மதுரை, சேலம், தஞ்சாவூர் என பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும்போது விதவிதமான பொம்மைகள் வாங்கி கொலுவில் வைக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

கொலுவில் வைக்கப்பட்டு உள்ள ஐய்யப்பன் சிலைக்கு தினமும் ஒரு அம்மன் வேடமிட்டு வழிபடுவதாக தெரிவித்த அவர், ஒன்பது நாட்களுக்கு தினமும் ஒரு பெண் குழந்தைக்கு அம்மன் வேடமிட்டு பெண்கள் அவர்களை வழிபாடு செய்ய உள்ளதாக கூறினார். இவ்வாறு குழந்தைகளை வழிபடுவதின் மூலம் கடவுள் குழந்தைகள் ரூபத்தில் தங்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம் என தெரிவித்தார்.



முன்னதாக இந்த கொலுவில் வைக்கப்பட்டு இருந்த அம்மன் வேடமிட்ட ஐய்யப்ப சிலைக்கு முன் பெண்கள் மற்றும் குழந்தைகள் பஜனை பாடல்கள் பாடி வழிபட்டனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...