நீலகிரியில் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள தயார் நிலையில் தீயணைப்பு வீரர்கள் - உதகை தீயணைப்பு நிலைய அதிகாரி தகவல்!

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள தீயணைப்பு வீரர்கள், தன்னார்வலர்கள் என 300க்கும் மேற்பட்டவர்கள் தயாராக இருப்பதாக உதகை தீயணைப்பு நிலைய அதிகாரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.


நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையினை எதிர்கொள்ள தீயணைப்பு வீரர்கள், தன்னார்வலர்கள் என 300க்கும் மேற்பட்டவர்கள் தயாராக இருப்பதாக உதகை தீயணைப்பு நிலைய அதிகாரி ரவிக்குமார் தெரிவித்துள்ளார்.



இது தொடர்பாக அவர் பேசுகையில், நீலகிரி மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையின் தாக்கம் குன்னூர், கோத்தகிரி பகுதியில் பொதுவாக அதிகரித்து காணப்படும். இதனை எதிர் கொள்ள தீயணைப்பு வீரர்கள் 24 மணி நேரமும் தயார் நிலையில் உள்ளனர். மாவட்டம் முழுவதும் நூற்று ஒரு பேர் இருக்க வேண்டிய நிலையில், தற்போது பணியில் 57 பேர் மட்டுமே இருப்பதால் கூடுதல் தேவைகளுக்காக கோவை உள்ளிட்ட சமவெளிப் பகுதியில் இருந்து எப்போது தேவைப்பட்டாலும் தீயணைப்பு வீரர்கள் அழைத்துக் கொள்ளப்பட உள்ளதாக தெரிவித்தார்.



மேலும், தன்னார்வ அமைப்பைச் சேர்ந்தவர்கள் நீலகிரி மாவட்டத்தில் உள்ள 4 தீயணைப்பு நிலையங்களிலும் தலா 50 முதல் 70 வரை ஒவ்வொரு தீயணைப்பு நிலையத்திலும் பணியாற்ற தயார்படுத்தி இருப்பதாகவும் அவர்கள் அனைவருக்கும் வெள்ளக்காலத்திலும், பேரிடர் காலத்திலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாக உதகை தீயணைப்பு நிலைய அதிகாரி தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...