கோவையில் குடிப்பதை நிறுத்த சொன்னதால் மனைவியை பூரி கட்டையால் தாக்கிய கணவன் கைது!

கோவை: கோவையில் குடிப்பதை நிறுத்தச் சொன்னதால் ஆத்திரமடைந்த கணவன் மனைவியை பூரி கட்டையால் தாக்கிய பூ வியாபாரி கைது செய்யப்பட்டார்.


கோவை: கோவையில் குடிப்பதை நிறுத்தச் சொன்னதால் ஆத்திரமடைந்து, மனைவியை பூரி கட்டையால் தாக்கிய கணவன் கைது செய்யப்பட்டார்.

கோவை கரும்புக்கடை திப்பு நகரைச் சேர்ந்தவர் காஜா உசேன்(50). இவரது மனைவி தாஜூநிஷா(45). காஜா உசேன் பூ வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு குடிப்பழக்கம் இருப்பதாக கூறப்படுகிறது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வருவதால் கணவன் மனைவியிடையே அடிக்கடி வாக்கு வாதம் ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு காஜா உசேன் குடிபோதையில் வீட்டுக்கு வந்துள்ளார். இதனை அவரது மனைவி தாஜூநிஷா கடுமையாக கண்டித்தார்.

இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த காஜா உசேன் அங்கிருந்து பூரி கட்டையை எடுத்து மனைவியின் தலையில் ஓங்கி அடித்து உள்ளார்.

இதில் தாஜூநிஷாவின் மண்டை பிளந்து ரத்தம் கொட்டியது. வலி தாங்க முடியாமல் தாஜூநிஷா அலறி உள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் வந்து பார்த்தபோது தலை முழுவதும் ரத்தமாக ஒழுகிய நிலையில் இருந்த அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்து உள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர், இதுகுறித்து மனைவி தாஜூநிஷா அளித்த புகாரின் பேரில் குனியமுத்தூர் போலீசில் புகார் வழக்குப்பதிவு செய்து காஜா உசேனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...