கோவையில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்த 62 பேர் கைது!

கோவை: கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்த 62 பேர் கைது செய்யப்பட்டனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை மற்றும் சட்டவிரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்த 62 பேர் கைது செய்யப்பட்டனர்.

தமிழகத்தில் புகையிலைப்பொருட்கள் விற்பனைக்கு தடை உள்ளது. ஆனால், பலர் இதனை பதுக்கி வைத்து மறைமுகமாக விற்பனை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கோவை சரவணம்பட்டி, ஆர்.எஸ்.புரம் பெரியகடைவீதி உள்ளிட்ட பல பகுதிகளில் உள்ள சிறிய பெட்டிக்கடைகள், மளிகைக்கடைகளில் மாநகர போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

அப்போது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான கணேஷ், ஹான்ஸ், விமல், பான் மசாலா ஆகியவற்றை விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, போலீசார் 53 பேரை கைது செய்து அவர்கள் பதுக்கி வைத்த புகையிலைப்பொருட்களை பறிமுதல் செய்தனர்.

இதேபோல், கோவை உக்கடம், சாயிபாபா காலனி, காட்டூர் போன்ற பகுதிகளில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டனர்.

அப்போது, சட்ட விரோதமாக மதுவிற்பனையில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த ரமேஷ்(44), லட்சுமணன்(56), ஆறுமுகம்(47), புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக்(29), வீரசேகரன்(43), இளையராஜா(27), மதுரையை சேர்ந்த செல்லையா(25), சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த ராஜ்குமார்(27), ஆனந்தமுருகன்(38), ஆகிய 9 பேரை கைது செய்து 60 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...