கோவை: கோவை தடாகம் சாலையில் உள்ள முத்தண்ணன் குளத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள் உள்ளன. பெரும்பாலான வீடுகள் மாநகராட்சியியால் இடிக்கப்பட்ட நிலையில், மீதமுள்ள வீடுகளை இடிக்கும் பணி மீண்டும் இன்று துவக்கப்பட்டது. இதன் பொருட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் முத்தண்னன் குளத்தில் பல்வேறு திட்டப் பணிகள் செயல்படுத்தப்பட உள்ளன. இதனிடையே அக்குளக்கரையில் வசிக்கும் மக்களுக்கு மலுமிச்சம்பட்டி, கீரணத்தம், காபி கடை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் குடிசை மாற்று வாரியத்தால் வீடுகள் ஒதுக்கப்பட்டு டோக்கன் வழக்கப்பட்டுள்ளன.
இதில் சில மாதங்களுக்கு முன்பு சுமார் 1600 பேர் தங்கள் வீடுகளை காலி செய்துவிட்டு அரசு அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு சென்றுவிட்டனர். அவர்களது வீடுகள் முதல் கட்டமாக இடிக்கப்பட்டது. அதன் பின் கடந்த 8ம் தேதி முதல் அங்கு காலியாக உள்ள 400 மேற்பட்ட வீடுகளை ஜே.சி.பி இயந்திரங்கள் உதவியுடன் இடிக்கும் பணிகளை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனிடையே முத்தண்ணன் குளக்கரையில் உள்ள மூன்று கோவில்களை இடிக்கும் பணியும் தற்போது நடைபெற உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த 12ம் தேதி அப்பகுதி மக்கள் முத்துமாரியம்மன் கோவில் முன்பு அமர்ந்து தர்ணாவில் ஈடுப்பட்டனர்.
அதன் பின் காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டத்தை அடுத்து கலைந்து சென்றனர்.
இந்நிலையில், முத்தண்ணன் குளக்கரையில் வீடுகளை இடிக்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு போலீசார் குவிக்கப்பட்டு வீடுகள் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், "வீடுகள் இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து கோவில்களை இடிக்கும் பணி நடைபெறும். பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையின் ஒருபகுதியாக போலீசார் பாதுகாப்பு பணிக்காக வரவழைக்கப்பட்டுள்ளனர்," என்றார்.