திருப்பூர்: திருப்பூரில் வரத்து குறைவு காரணமாக சின்ன வெங்காயம் விலை உயர்ந்து சேமிப்பு பட்டறைகளில் உள்ள வெங்காயத்துக்கு நல்ல விலை கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

விளைச்சல் குறைவு மற்றும் உற்பத்தி பரப்பும் குறைவாக இருப்பதால் சின்ன வெங்காயம் விலை சற்று உயர்ந்துள்ளது. தற்போது சேமிப்பு பட்டறைகளில் உள்ள சின்ன வெங்காயத்தினை வியாபாரிகள் ரூ. 60 முதல் ரூ. 65 வரை கொள்முதல் செய்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் பொங்கலூர், கொடுவாய், குண்டடம், பல்லடம், மற்றும் பூளவாடி உள்ளிட்ட பல பகுதிகளில் சின்ன வெங்காயம் அதிக அளவில் பயிரிடப்படுகிறது. அதிக விளைச்சல் இருந்தும், போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் சின்ன வெங்காயத்தை பட்டறையிட்டு சேமித்து வைத்திருந்தனர்.
இந்த நிலையில், தற்போது வரத்து குறைவு காரணமாக விலை ஏற்றமடைந்து வருவதால் தற்போது சேமிப்பில் இருந்த சின்ன வெங்காயம் கட்டுப்படியாகும் விலைக்கு விற்பனையாவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தற்போது, திருப்பூர் தென்னம்பாளையம் சந்தைக்கு திருப்பூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து சின்ன வெங்காயம் விற்பனைக்காக கொண்டுவரப்படுகிறது.
மேலும், கடந்த சில நாட்களாக சின்ன வெங்காயத்தின் விலை ஒரு கிலோ ரூ.90 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்படுகிறது. பண்டிகை காலம் நெருங்கி வருவதால் மேலும் விலை உயர வாய்ப்புள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.