கோவை: தமிழகத்தில் ஆயிரக்கணக்கான ஏக்கர் கோயில் நிலங்கள் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன அவற்றை மீட்கும் வரை இந்து முன்னணியின் போராட்டம் ஓயாது, என அவ்வமைப்பின் மாநில தலைவர் காடேஸ்வார சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

பொள்ளாச்சியில் அனைத்து இந்து இயக்கங்கள் சார்பில், இந்து முன்னணி நிறுவனர் ராமகோபாலனுக்கு, ‘ஷ்ரதாஞ்சலி’ நேற்று நடத்தப்பட்டது. விழாவின் போது பேசிய தென் தமிழக ஆர்.எஸ்.எஸ். தலைவர் மாரிமுத்து, இந்து தர்மத்தின் மீது அக்கறை கொண்டு செயலாற்றியவர் ராமகோபாலன் என்றும் இந்து சமுதாயம் மேலோங்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர் என்று புகழாரம் சூட்டினார்.

அவரின் எண்ணத்தை நிறைவேற்ற அனைவரும் பாடுபட வேண்டும், என்று வேண்டுகோள் விடுத்தார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற மேகாலயாவின் முன்னாள் கவர்னர் சண்முகநாதன், பேசுகையில், ராமகோபாலன் இளைஞர்களை ஒருங்கிணைத்து கிராமங்கள் தோறும், வீதிகள் தோறும் விநாயகர் சிலைகள் வைத்து, இந்துகளிடையே எழுச்சியை ஏற்படுத்தியவர், என்றார்.
நிகழ்ச்சிக்கு பின், செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம், ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கோயில் நிலங்கள் மீட்க இந்து முன்னணி சார்பில் வழக்கு போடப்பட்டுள்ளது. கோயில் நிலங்களை மீட்கும் வரை ஓய மாட்டோம். கோயில் நிலங்களை கோயிலுக்கு தான் பயன்படுத்த வேண்டும் என நீதிமன்றம் கூறியுள்ளது. அதை அரசு பின்பற்ற வேண்டும், என்றார்.
மேலும், கோயில்களில் தரிசன கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். இதை செயல்படுத்த அரசு தயக்கம் காட்டுகிறது, என்று தெரிவித்தார்.
விழாவில் தென் தமிழக ஆர்.எஸ்.எஸ்., தலைவர் மாரிமுத்து, இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், மாநில செயலாளர் அண்ணாத்துரை, மேகாலயா முன்னாள் ஆளுநர் வி.சண்முகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.