கோவை: கோவை பொள்ளாச்சி அருகே போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட பெற்றோருக்கு ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதியினர் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பகுதியில் தங்கி தென்னை நார் உரிக்கும் பணி செய்து வந்துள்ளனர். இத்தம்பதியினருக்கு 12 வயதில் மகள் உள்ளார்.
இந்நிலையில், சிறுமியின் தந்தை மகள் என்றும் பாராமல் பாலியல் துன்புறுத்தல் செய்து வந்துள்ளார். இந்த விவகாரம் சிறுமியின் தாய்க்கு தெரிந்ததும் தனது கணவரை கண்டிக்காமல் உடந்தையாக இருந்துள்ளார்.
இது குறித்து சிறுமி அளித்த புகாரின் பேரில் ஆனைமலை போலீசார் கடந்த 9.6.2019ல் இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, இந்த வழக்கு விசாரணை கோவை போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த தந்தைக்கும் அதற்கு உடந்தையாக இருந்த தாய் இருவருக்கும் ஆயுள் தண்டனை, தலா 1,000 ரூபாய் அபராதம் மற்றும் அரசு சார்பில் சிறுமிக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி ராதிகா தீர்ப்பு வழங்கினார்.