திருப்பூர்: திருப்பூர் மாவட்ட மீன் வியாபாரிகள் நலச் சங்கம் துவக்க விழாவில் நலிவடைந்த மீன் வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருப்பூர் போயம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று திருப்பூர் மாவட்ட மீன் வியாபாரிகள் நல சங்கம் துவங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மீன் வியாபாரிகளின் பிரச்சனைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய தீர்வு காணவும் மீன் வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் நலச்சங்கம் துவங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
கொரோனா காலத்தில் வியாபாரம் இல்லாததால் மிகவும் நலிவடைந்த மீன் வியாபாரிகளுக்கு சங்கத்தின் சார்பாக பத்தாயிரம் ரூபாய் மதிப்புள்ள காசோலைகள் வழங்கப்பட்டது. மேலும், திருப்பூர் மாவட்டம் முழுவதும் மீன் கடைகளை சுகாதாரத்துடன் வைத்திருப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.