நீலகிரி மாவட்டம் கிரேக் மாேர் எஸ்டேட் பகுதியில் சேற்றில் சிக்கிய காட்டெருமை உயிருடன் பத்திரமாக மீட்பு!

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கிரேக் மாேர் எஸ்டேட் பகுதியில் சேற்றில் சிக்கிய காட்டெருமை உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது.


நீலகிரி: நீலகிரி மாவட்டம் கிரேக் மாேர் எஸ்டேட் பகுதியில் சேற்றில் சிக்கிய காட்டெருமை உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் தூதூர் மட்டம் கிரேக் மோர் பகுதியை சுற்றியுள்ள வனப்பகுதியில் யானை, சிறுத்தை, காட்டெருமை உள்ளிட்ட வனவிலங்குகள் வாழ்ந்து வருகின்றன.

இந்நிலையில், இப்பகுதியில் காட்டெருமை ஒன்று சேற்றில் சிக்கி தவித்து வருவதாக அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர், இதனைத் தொடர்ந்து, குன்னூர் வனச்சரகர் சசிகுமார் தலைமையில் சம்பவ இடத்துக்கு சென்ற வனத்துறையினர் சுமார் இரண்டு மணி நேர போராட்டத்திற்குப் பின்பு காட்டெருமையை சேற்றிலிருந்து வெளியே கொண்டு வந்தனர்.



பின்னர், உணவு கிடைக்காமல் மிகவும் சோர்வுடன் காணப்பட்ட இந்த காட்டெருமைக்கு குளுக்கோஸ் கொடுத்த பிறகு சற்று அசைவு ஏற்பட்டது. பின்னர் புற்களை உண்ணும் நிலைக்கு உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

உயிருக்குப் போராடிய நிலையில் காட்டெருமையை காப்பாற்றிய வனத்துறையினரின் செயல் வரவேற்பை பெற்றுள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...