கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்தின் பல்வேறு பகுதியில்‌ மாநகராட்சி ஆணையர் ஆய்வு!

கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ பகுதியில்‌ இன்று ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌, பல்வேறு இடங்களில்‌ ஆய்வு மேற்கொண்டார்.


கோவை: கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலம்‌ பகுதியில்‌ இன்று ஆய்வு மேற்கொண்ட மாநகராட்சி ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர் பெ.குமாரவேல்‌ பாண்டியன்‌ இ.ஆ.ப., அவர்கள்‌, பல்வேறு இடங்களில்‌ ஆய்வு மேற்கொண்டார்.

கோவை மாநகராட்சி கொரோனா வைரஸ்‌ தொற்று பரவுதலை தடுப்பதற்காக பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மிகச்சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.



கோவை மாநகராட்சி பீளமேடு பகுதியில்‌ உள்ள கல்லூரி நகரில்‌ வார்டு எண்‌.56ல்‌ சுகாதார பணியாளர்கள்‌ வீடூ வீடாக சென்று வெப்பமானி கொண்டு உடல்‌ வெப்பநிலை கண்டறிதல்‌ மற்றும்‌ சளி, காய்ச்சல்‌, இருமல்‌, மூச்சுத்திணறல்‌ போன்ற அறிகுறி உள்ளவர்களை கண்டறிந்து கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுவரும்‌ பணிகளை குறித்து கேட்டறிந்தும்‌, அப்பகுதியில்‌ நடைபெற்றுவரும்‌ மருத்துவ முகாமினை பார்வையிட்ட ஆணையாளர்‌ அவர்கள்‌ மருத்துவ முகாமில்‌ பரிசோதனைக்காக வந்திருந்த பொதுமக்களிடம்‌ சளி, காய்ச்சல்‌, இருமல்‌, மூச்சுத்திணறல்‌ போன்ற அறிகுறி உள்ளவர்கள்‌ உடனடியாக கொரோனா பரிசோதனை செய்துகொள்ளுமாறும்‌, அனைவரும்‌ கட்டாயம்‌ முகக்கவசம்‌ அணிய வேண்டும்‌, சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறும்‌ தெரிவித்தார்.



அதனைத்‌ தொடர்ந்து சிங்காநல்லூர்‌, உப்பிலிபாளையம்‌ பகுதியில்‌ தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய பிரிவில்‌ உள்ள வீடுகளில்‌ வசிக்கும்‌ பொதுமக்கள்‌ மக்கும்‌, மக்கா குப்பைகள்‌ மற்றும்‌ அபாயகரமான குப்பைக்‌ கழிவுகளை தூய்மை பணியாளர்களிடம்‌ தனித்தனியாக பிரித்து குப்பைத்‌ தொட்டிகளில்‌ சேகரிக்கப்பட்டு வருவதை பார்வையிட்ட ஆணையாளர்‌ அவர்கள்‌ அப்பகுதியில்‌ கழிவுநீர் கால்வாய்களில்‌ நீர் தேங்காமல்‌ சுத்தம் செய்து கொசு மருந்து தெளித்து கொசு உற்பத்தியாகாமல் இருக்க வேண்டுமென தூய்மைப் பணியாளர்களிடம்‌ தெரிவித்தார்.



அதனைத்‌ தொடர்ந்து உப்பிலிபாளையம்‌ வார்டு எண்‌.64க்குட்பட்ட நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த ஆணையாளர்‌ மற்றும்‌ தனி அலுவலர்‌ அவர்கள்‌, செவிலியர்களிடம்‌ கொரோனா பரிசோதனை செய்யப்படும்‌ விபரங்கள்‌, சளி, காய்ச்சல்‌, இருமல்‌ உள்ளிட்ட பரிசோதனை விபரங்களைக்‌ கேட்டறிந்து, சுகாதார நிலையத்திற்கு அடிப்படை வசதிகள்‌ ஏதேனும் தேவைப்படுகின்றனவா என கேட்டறிந்த ஆணையாளா்‌, ஆரம்ப சுகாதார நிலையத்தில்‌ கொசு உற்பத்தியில்லாமல்‌ தூய்மையாக வைத்துக்கொள்ளுமாறு சம்மந்தப்பட்ட சுகாதார பணியாளர்களிடம்‌ தெரிவித்தார்.



இந்த ஆய்வின் போது கிழக்கு மண்டல உதவி ஆணையர்‌ எம்‌.முருகன்‌, செயற்பொறியாளர்‌ ஞானவேல்‌, உதவி செயற்பொறியாளர்‌ பிரபாகரன்‌, மண்டல சுகாதார அலுவலர் சந்திரன் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ராஜேந்திரன், தனபால் ஆகியோர் உடனிருந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...