கோவை: கோவையில் பெண் ஒருவர் குளிப்பதை செல்போனில் படம்பிடிக்க முயன்ற சிலிண்டர் விநியோகம் செய்யும் நபரை போலீசார் கைது செய்தனர்.

கோவை பொன்னையராஜபுரம் பகுதியில் வசித்து வரும் 40 வயது பெண் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வழக்கம்போல தனது வீட்டின் குளியலறையில் குளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தான் குளிப்பதை செல்போனில் படம் பிடிப்பதை அறிந்து கூச்சலிட்டு உள்ளார். இதனால் சுதாரித்துக் கொண்ட அந்த நபர் அங்கிருந்து வேகமாக நகர்ந்து உள்ளார்.
இந்நிலையில், அப்பெண் குளியலறை விட்டு வெளியே வந்து பார்த்த போது சிலிண்டர் விநியோகம் செய்யும் நபர் ஒருவர் அவசர அவசரமாக தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றது சந்தேகத்தை ஏற்படுத்தியது.
பின்னர், இச்சம்பவம் தொடர்பாக பெண்ணின் கணவர் வெரைட்டி ஹால் சாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து போலீசார் சிலிண்டர் விநியோகிக்கும் செல்வராஜ் என்ற நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், விசாரணையில் செல்வராஜ் சிலிண்டர் விநியோகிக்க செல்லும்போது ஆள் நடமாட்டம் இல்லாததை அறிந்து கொண்டு தனது செல்போன் மூலம் பெண் குளிப்பதை படம் பிடிக்க முயன்றது தெரியவந்தது. இதனையடுத்து செல்வராஜை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.