கழகப்பொருளாளர்‌ வெற்றிவேல்‌ மறைவு செய்தி கேட்டு கலங்கி நிற்கிறேன்‌; ஆறுதல்‌ சொல்ல வார்த்தைகள்‌ இன்றி தவிக்கிறேன்‌ - டிடிவி தினகரன் இரங்கல்

சென்னை: அம்மா மக்கள்‌ முன்னேற்றக்‌ கழகத்தின்‌ பொருளாளரும்‌, எனது இனிய நண்பருமான திரு வெற்றிவேல்‌, அவர்கள்‌ மறைந்தார்‌ என்ற செய்தியை நம்பமுடியாமல்‌ தவிக்கிறேன்‌. மிகுந்த வேதனையும்‌ சொல்ல முடியாத துயரமும்‌ என்‌ தொண்டையை அடைக்கிறது, என அ.ம.மு.க கட்சியின் பொது செயலாளர், டிடிவி தினகரன் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


சென்னை: அம்மா மக்கள்‌ முன்னேற்றக்‌ கழகத்தின்‌ பொருளாளரும்‌, எனது இனிய நண்பருமான திரு வெற்றிவேல்‌, அவர்கள்‌ மறைந்தார்‌ என்ற செய்தியை நம்பமுடியாமல்‌ தவிக்கிறேன்‌. மிகுந்த வேதனையும்‌ சொல்ல முடியாத துயரமும்‌ என்‌ தொண்டையை அடைக்கிறது, என அ.ம.மு.க கட்சியின் பொது செயலாளர், டிடிவி தினகரன் இரங்கல் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அ.ம.மு.க பொருளாளர் மற்றும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வெற்றிவேல், கொரோனா பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று மாலை காலமானார்.

சென்னை தனியார் மருத்துவமனையில் இரண்டு வாரமாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் உடல் நிலை சில தினங்களாக மோசம் அடைந்து வந்தது. இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று அவர் உயிர் பிரிந்தது.

அவரது மறைவு குறித்து இரங்கல் செய்தி வெளியிட்டுள்ள, கட்சியின் பொது செயலாளர், டிடிவி தினகரன், "புரட்சித்தலைவி அம்மா மற்றும்‌ தியாகத்தலைவி சின்னம்மா அவர்களின்‌ பேரன்பைப்‌ பெற்றவர்‌. என்‌ மீது அளவிட முடியாத பாசம்‌ கொண்டவர்‌. எதையும்‌ உரிமையோடு பளிச்சென பேசுபவர்‌. 'என்ன நடந்தாலும்‌ நான்‌ தியாகத்தின்‌ பக்கம்‌, உண்மையின்‌ பக்கமே நிற்பேன்‌' என்று உறுதிபடச்‌ சொல்லி, இறுதிவரை கழகத்தின்‌ மீது அளப்பரிய அன்பு கொண்டிருந்தவர்‌.

துரோகத்திற்கு எதிராக நாம்‌ நடத்தி வருகிற புனிதப்‌ போரில்‌ ஒரு தளபதியாக நம்மோடு களத்தில்‌ நின்றவர்‌. 'வெற்றி... வெற்றி' என வாய்‌ நிறைய அழைத்து, இனி யாரிடம்‌ பேசப்போகிறோம்‌ என்று நினைக்கிற போதே, எதற்காகவும்‌ கலங்காத என்‌ உள்ளம்‌ கலங்கித்‌ தவிக்கிறது. திரு.வெற்றிவேல்‌ அவர்களின்‌ மறைவு கழகத்திற்கும்‌, தனிப்பட்ட முறையில்,‌ எனக்கும்‌ ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

அவரது மறைவால்‌ வாடும்‌ குடும்பத்தினருக்கும்‌, கழகத்தினருக்கும்‌ ஆறுதல்‌ சொல்ல வார்த்தைகளின்றி தவிக்கிறேன்‌. நம்முடைய லட்சியப்பயணத்தில்‌ 'வெற்றிவேல்‌' என்கிற பெயர்‌ எப்போதும்‌ நிலைத்திருக்கும்‌. அவரது ஆன்மா இறைவன்‌ திருவடி நிழலில்‌ இளைப்பாற வேண்டுகிறேன்‌", என்று வேதனைப்பட தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...