வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டி - கோவையில் தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் தகவல்!

கோவை: வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் களம் காண உள்ளதாக கோவையில் தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் தெரிவித்தனர்.


கோவை: வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் களம் காண உள்ளதாக கோவையில் தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் தெரிவித்தனர்.



கோவை பத்திரிகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு இளைஞர் கட்சியினரின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது. அப்போது பேசிய இக்கட்சியின் மாநில துணை அமைப்பாளர் ஹார்சன் பிரபு, வரும் சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் தமிழ்நாடு இளைஞர் கட்சியினர் களம் காண உள்ளதாகவும் துணிச்சலான மக்கள் நலனில் அக்கறை கொண்டவர்கள் கொண்ட இளைஞர் படையை உருவாக்குவோம் என தெரிவித்தார்.

இந்திய மக்கள் தொகையில் 65% பேர் இளைஞர்கள் உள்ள நிலையில், அரசியல் அதிகாரத்தில் வாய்ப்பு அளிக்கப்பட்டு இருந்தால் நாடு வளர்ச்சி அடைந்து வல்லரசாக மாறி இருக்கும் எனவும் இளைஞர்கள் அரசியலில் ஈடுபட்டு இருந்தாலும் அவர்கள் தகுதியற்ற அரசியல் தலைவர்களின் ஆதாயத்திற்காக பயன்படுத்தப் படுவதாக கூறினார்.

ஜல்லிக்கட்டு போராட்டத்தில் இளைஞர்கள் ஒன்றிணைந்து அனைத்து மாவட்டங்களிலும், இரண்டு லட்சத்து எட்டாயிரத்து 639 உறுப்பினர்களுடன் இந்த நான்கு ஆண்டுகளில் 1600க்கும் மேற்பட்ட அலுவலக பொறுப்பாளர்களை நியமித்து உள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், கட்சி பதிவு செய்யப்பட்டு மூன்று மாதங்களே ஆன நிலையில் 2017ம் ஆண்டு ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிட்டதாகவும் 2019ல் 16 தொகுதிகளில் போட்டியிட்டு ஆறாவது இடம் பெற்றதாக கூறினர். அரசியலில் மிகப்பெரிய வெற்றிடம் உள்ளதாக கூறியவர்கள் தகுதியான இளைஞர்களுக்கு வாய்ப்புகள் அளிக்கப்படுவதில்லை எனவும் தெரிவித்தனர்.

அதேபோல, தற்போது அரசியலில் உள்ளவர்கள் மக்களிடம் இருந்து பணம் சுரண்ட முடியும் என்பதிலேயே அதிக கவனம் செலுத்துவதால் மக்கள் பிரச்சனைகளை கவனிப்பதில்லை என்றனர். இளைஞர்களை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துவதின் மூலம் வளர்ச்சியை நோக்கி முன்னேற முடியும் என தமிழ்நாடு இளைஞர் கட்சி நம்புவதாக தெரிவித்தனர்.

புரட்சியில் இருந்து வந்தவர்கள் தாங்கள் எனவும் தேவைப்பட்டால் அரசியலை மறுசீரமைப்பு செய்யவும் தயாராக உள்ளதாக தெரிவித்தனர். 2021ம் ஆண்டு 234 தொகுதிகளிலும் போட்டியிட உள்ளதாகவும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட இளைஞர் படையை உருவாக்கி தேர்தலில் புதிய சரித்திரம் படைப்போம் என தெரிவித்தவர்கள், மாற்று கட்சியினர் தங்களுடன் இணைந்து பணியாற்ற வரவேற்க படுவதாகவும் தெரிவித்தனர்.



இந்த பத்திரிகையாளர் சந்திப்பின் போது அக்கட்சியின் மகளிர் அணி ஒருங்கிணைப்பாளர் லத்தீபா, மாவட்ட துணைத் தலைவர் மணிகண்டன், மாவட்ட செயலாளர் தர்மேந்திரன், மாவட்ட பொருளாளர் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...