மாற்று திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடிகை குஷ்பூ பேசியதை கண்டித்து மாற்று திறனாளிகள் பாதுகாப்போர் சங்கத்தினர் காவல் நிலையத்தில் புகார்!

கோவை: மாற்று திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடிகை குஷ்பூ பேசி உள்ளதை கண்டித்து மாற்று திறனாளிகள் பாதுகாப்போர் சங்கத்தினர் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.


கோவை: மாற்று திறனாளிகளை அவமதிக்கும் வகையில் நடிகை குஷ்பூ பேசி உள்ளதை கண்டித்து மாற்று திறனாளிகள் பாதுகாப்போர் சங்கத்தினர் காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.

காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய நடிகை குஷ்பூ சமீபத்தில் பாரதீய ஜனதா கட்சியில் இணைந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, காங்கிரஸ் கட்சி மூளை வளர்ச்சி இல்லாத கட்சி என விமர்சனம் செய்து இருந்தார்.

இந்த நிலையில், அரசியல் எதிரிகளை தாக்குவதற்கு மாற்றுதிறனாளிகளை அவமானப்படுத்திய திரைக்கலைஞர் குஷ்பு மீது வழக்கு பதிய வலியுறுத்தி கோவையில் மாற்று திறனாளிகள் பாதுகாப்போர் சங்கத்தின் காவல் நிலையங்களில் புகார் அளித்தனர்.

அந்த மனுவில், இத்தகைய வார்த்தைகள் மாற்று திறனாளிகள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாகவும் அறிவியல் ரீதியான குறைபாட்டை அரசியல் எதிரிகளை தாக்குவதற்காக மாற்று திறனாளிகளை அவமானப்படுத்திய திரைக்கலைஞர் குஷ்பு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என மாற்று திறனாளிகள் சங்கத்தினர் வலியுறுத்தினர்.

மேலும், இதுவரை குஷ்பு வருத்தம் தெரிவிக்காத நிலையில் உள்நோக்கத்துடன் அவர் இக்கருத்தை தெரிவித்து உள்ளார் எனவும் குஷ்பு மீது ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின்படி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என அனைத்து காவல் நிலையங்களிலும் புகார் அளிப்பது என மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் முடிவெடுத்திருந்தனர்.

இந்நிலையில், கோவை, பொள்ளாச்சி உள்ளிட்ட காவல் நிலையங்களில் இச்சங்கத்தின் தலைவர்கள் எஸ்.புனிதா, மகாலிங்கம் உள்ளிட்டோர் புகார் மனு அளித்தனர். முன்னதாக காவல்துறையினர் புகாரை வாங்க மறுத்ததால் வழக்கறிஞர்கள் துணையுடன் ஆன்லைனில் புகார் மனுக்களை பதிவு செய்துள்ளனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...