உலகப் புகழ்பெற்ற மலை ரயிலின் 112வது ஆண்டு தொங்கியதை முன்னிட்டு உதகை மலை ரயில் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாட்டம்!

நீலகிரி: உலகப் புகழ்பெற்ற மலை ரயிலின் 112வது ஆண்டு தொங்கியதை முன்னிட்டு உதகை மலை ரயில் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.

நீலகிரி: உலகப் புகழ்பெற்ற மலை ரயிலின் 112வது ஆண்டு தொங்கியதை முன்னிட்டு உதகை மலை ரயில் நிலையத்தில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. 



மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் உலக அளவில் புகழ்பெற்ற மலை ரயிலில் ஆண்டுக்கு 33 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றனர். இவர்களில் 80 சதவீதம் பேர் மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டி வரும் நிலையில், மேட்டுப்பாளையத்திலிருந்து உதகை வரை 32 பெரிய பாலங்கள், 40க்கும் மேற்பட்ட சிறு பாலங்கள், 16க்கும் மேற்பட்ட குகைகள் வழியாக மலைப்பாதையில் குழந்தைபோல் தவிழ்ந்து ஓடும் மலை ரயில்.

குன்னூர் முதல் மேட்டுப்பாளையம் வரை 1899ம் ஆண்டு போக்குவரத்து துவங்கப்பட்ட நிலையில், குன்னூரில் இருந்து உதகை வரை 1908ம் ஆண்டு அக்டோபர் மாதம் 15ம் தேதி துவங்கப்பட்டது. இன்றுடன் 111ம் ஆண்டு நிறைவு பெற்று 112ம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தினத்தை கொண்டாடும் வகையில் குன்னூரில் இருந்து நீராவி இன்ஜினை கொண்ட சிறப்பு மலை ரயில் உதகை வரை இயக்கப்பட்டது. 

அப்போது, மலை ரயிலை வரவேற்ற நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா மற்றும் மலை ரயில் பாதுகாப்பு அறக்கட்டளை நிறுவனர் நடராஜ் ஆகியோர் மலை ரயில் தினத்தை கொண்டாடும் வகையில் கேக் வெட்டி , ரயில்வே ஊழியர்களுக்கு பூங்கொத்து அளித்து மலைரயில் தினத்தை சிறப்பித்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...