கோவையில் திருமணமான பெண்ணிற்கு தொல்லை கொடுத்து வந்த நபரை கத்தியால் குத்திய தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு!

கோவை: கோவையில் திருமணமான பெண்ணிற்கு தொல்லை கொடுத்து வந்த நபரை கத்தியால் குத்திய தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

கோவை: கோவையில் திருமணமான பெண்ணிற்கு தொல்லை கொடுத்து வந்த நபரை கத்தியால் குத்திய தந்தை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

கோவை போத்தனூர் கலைஞர் நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வகுமார்(48) கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகளை வீராச்சாமி(24) என்பவர் ஒருதலைபட்சமாக காதலித்து வந்துள்ளார். அந்த பெண்ணை பின் தொடர்ந்து தனது காதலை அடிக்கடி வெளிப்படுத்தி வந்துள்ளார்.

அந்த பெண் காதலை மறுத்ததை தொடர்ந்து வீராசாமி, பெண்ணின் வீட்டிற்கு சென்று திருமணம் செய்து வைக்கும் படி கேட்டுள்ளார். ஆனால், பெண்ணின் பெற்றோர்கள் மறுத்துவிட நான்கு வருடங்களுக்கு முன்பு வேறொருவருக்கு திருமணம் செய்து வைத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த வீராச்சாமி அந்த பெண் திருமணம் செய்த இடத்தை தெரிந்து கொண்டு அடிக்கடி அங்கே சென்று தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனை அறிந்த பெண்ணின் தந்தை செல்வகுமார் நேற்று செட்டிப்பாளையம் பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த வீராசாமியை சந்தித்து, திருமணமான தனது பெண்ணின் வீட்டிற்கு அடிக்கடி சென்று தகராறு செய்வது குறித்து தட்டி கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

இதனை தொடர்ந்து ஆத்திரமடைந்த செல்வகுமார், அவர் மறைத்து வைத்திருந்த கத்தியை கொண்டு வீராச்சாமியை கழுத்து மற்றும் கை பகுதியில் குத்தியதில் பலத்த காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனை கண்டு அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதனையடுத்து வீராச்சாமியை மீட்ட பொதுமக்கள், அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து வீராச்சாமி அளித்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த செட்டிப்பாளையம் போலீசார் செல்வகுமாரை கைது செய்து அவினாசி கிளை சிறையில் அடைத்தனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...