வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்கள் மற்றும் இடம்பெயர்ந்தவர்களின் பெயரை நீக்குவது குறித்து பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம்

பொள்ளாச்சி: வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்கள் மற்றும் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்களின் பெயரை நீக்குவது குறித்து, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில், இன்று அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பொள்ளாச்சி: வாக்காளர் பட்டியலில் இருந்து இறந்தவர்கள் மற்றும் நிரந்தரமாக இடம் பெயர்ந்தவர்களின் பெயரை நீக்குவது குறித்து, பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில், இன்று அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பொள்ளாச்சி சார் ஆட்சியர், வைத்திநாதன் தலைமை தாங்கிய இக்கூட்டத்தில், தாசில்தார் தணிகைவேல், தேர்தல் பிரிவு தாலுகா அலுவலர், சுப்ரியா மற்றும் பல்வேறு கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் பேசிய அதிகாரிகள், "சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடிக்குட்பட்ட பகுதியில் 1500 வாக்காளர்களுக்கு மேல் இருந்தால், அந்த வாக்குச்சாவடியில் உள்ள பட்டியலிருந்து வாக்காளரை பிரித்து, குறைவான வாக்குச்சாவடியில் உள்ள வாக்காளர் பட்டியலில் இணைக்க வேண்டும். மேலும், இறந்த நபர்களோ, நிரந்தரமாக இடம்பெயர்ந்தவர்களின் பெயர்களோ, வாக்காளர் பட்டியலில் இருந்தால், அதனை நீக்குவதற்கான வழிவகை செய்ய வேண்டும்."

வாக்குச்சாவடிகளில் பராமரிப்பு பணிகள் எவ்வாறு உள்ளது என கண்டறிந்து, அதில் குறைகள் இருந்தால் அதை உடனே அதிகாரிகளிடம் தெரிவிக்கலாம். ஓட்டுக்கூரையில் செயல்படும் வாக்குச்சாவடிகள், அருகே உள்ள கான்கிரீட் கட்டிடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும். 100 சதவீதம் வாக்களிக்கும் வகையில், விடுபட்ட புதிய வாக்காளர்களை வாக்காளர் பட்டியலில் இணைக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று வலியுறுத்தினார். 

வாக்காளர் பட்டியல்களை சரிபார்த்து, அதில் உள்ள குறைபாடுகளை களைய அனைத்து கட்சியினரும் ஒத்துழைப்பு அளிக்க, கேட்டுகொள்ளப்படுகிறது, என்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...