விடுப்பு எடுப்பதை தடுக்கும் அறிக்கையை கண்டித்து, கோவையில் அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் அடையாள ஆர்ப்பாட்டம்..!

கோவை: பயன்பாட்டில் இருக்கும் மருத்துவ விடுப்பு, தற்செயல் விடுப்பு விடுமுறைகளை தடுக்கும் விதமாக அனுப்பட்ட கடித்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி, கோவையில் இன்று அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


கோவை: பயன்பாட்டில் இருக்கும் மருத்துவ விடுப்பு, தற்செயல் விடுப்பு விடுமுறைகளை தடுக்கும் விதமாக அனுப்பட்ட கடித்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி, கோவையில் இன்று அண்ணா பல்கலைக்கழக ஆசிரியர்கள் அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 2012ம் ஆண்டு முதல் சென்னை அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைந்து செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், கடந்த 2015ம் தேதியிலிருந்து அரசால் அனுமதிக்கப்பட்ட பயன்பாட்டில் இருந்து வந்த மருத்துவ விடுப்பு, சிறப்பு தற்செயல் விடுப்பு போன்ற விடுமுறைகள் எடுப்பதை தடுக்கும் வகையில் கடந்த 9 ஆம் தேதி, சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.



கொரோனா காலத்தில் இது போன்ற கடிதம் அனுப்பட்டதை கண்டித்தும், கடிதத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும், நடைமுறையில் உள்ள விடுப்புகளை அனுமதிக்க வலியுறுத்தியும், கோவை அண்ணா பல்கலைக் கழகத்தில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கருப்பு கொடி அணிந்து அடையாள ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அதனைத் தொடர்ந்து, கல்லூரி முதல்வர் ரவிச்சந்திரன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் மற்றும் பணியாளர்களின் கோரிக்கையை பரிசீலனைக்கு அனுப்பி வைப்பதாக வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் புதிய கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா, தெற்கு மற்றும் மேற்கு மண்டலங்களில் கட்டப்பட்டுவரும் கழிவுநீர் சுத்திகர...

வடவள்ளி உள்ளிட்ட பகுதிகளில் நாளை 8 மணி நேரம் மின்தடை

கோவை எஸ்.என்.பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால், வடவள்ளி உள்ளிட்ட 11 பகுதிகளில் கா...

குறிச்சி பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

குறிச்சி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சிட்கோ குற...

கிணத்துக்கடவு பகுதியில் நாளை (16.07.2026) மின்தடை அறிவிப்பு

கிணத்துக்கடவு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை காலை 9 முதல் மாலை 5 வரை சுலக்கல், தாம...

கோவையில் அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

நீதித்துறையின் சுதந்திரம், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் அலுவல் மொழி, இளம் வழக்கறிஞர்களுக்கு உதவித்தொகை உள்ளிட்ட பல்வே...

அமராவதி அணை 50.56 அடி, திருமூர்த்தி அணை 27.75 அடி நீர்மட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...