ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில், 16ம் தேதி அமாவாசையன்று இரவு நடை திறக்கப்படாது - கோயில் நிர்வாகம் அறிவிப்பு

கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில், 16ம் தேதி அமாவாசையன்று இரவு நடை திறக்கப்படாது, என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


கோவை: பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில், 16ம் தேதி அமாவாசையன்று இரவு நடை திறக்கப்படாது, என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோயிலுக்கு, உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும், ஏராளமான பக்தர்கள், அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் தரிசனம் செய்து வருகின்றனர்.

சமீபத்தில், கொரோனா நோய் தொற்று காரணமாக மார்ச் மாதம் மூடப்பட்ட மாசாணியம்மன் கோயில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் கட்டுப்பாடுகளுடன் செயல்பட தொடங்கியது. பக்தர்கள் பூஜை பொருட்கள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த மாதத்திற்கான அமாவாசை நாளை 16ம் தேதி வருகிறது. கொரோனா தொற்று காரணமாக, அமாவாசை அன்று இரவு கோயில் நடை திறக்கப்படாது என, கோயில் நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அமாவாசை அன்று, வழக்கம்போல் பக்தர்கள் காலை 6 மணி முதல் 8 மணி வரை அம்மனை தரிசிக்கலாம் என்றும், கோயிலுக்கு வரும் பக்தர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும், கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், என்று கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...