மூன்றாவது கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி மார்க்., கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்!

திருப்பூர்: மூன்றாவது கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக மங்கலம் சாலை பெரியாண்டிபாளையம் முதல் குளத்துபுதூர் வரை தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


திருப்பூர்: மூன்றாவது கூட்டு குடிநீர் திட்ட பணிகளுக்காக மங்கலம் சாலை பெரியாண்டிபாளையம் முதல் குளத்துபுதூர் வரை தோண்டப்பட்ட சாலைகளை உடனடியாக சரி செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



திருப்பூரில், மூன்றாவது கூட்டுக் குடிநீர் திட்டத்திற்காக மேட்டுப்பாளையத்தில் இருந்து அவிநாசி மங்கலம் வழியாக திருப்பூர் மாநகராட்சி பகுதிகளுக்கு குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இதில் திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட மங்கலம் சாலை பெரியாண்டிபாளையம் முதல் பொறுத்து புதூர் வரை கூட்டு குடிநீர் திட்டத்திற்காக சாலைகள் போடப்பட்டு குடிநீர் குழாய்கள் பாதிக்கப்பட்டது.

ஆனால், அதன் பின்னர் மூடப்பட்ட சாலைகள் முறையாக சரி செய்யப்படாமல் குண்டும் குழியுமாக ரோடுகள் பெயர்ந்தும் காணப்படுவதால், அடிக்கடி இந்த சாலையில் விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளது.



எனவே, மாநகராட்சி நிர்வாகம் உடனடியாக குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட சாலைகளை சீர் செய்ய வேண்டும் என வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் இன்று மங்கலம் சாலை குளத்து புதூர் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் தொழில்துறை கணிதம் குறித்த தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தேசிய அறிவியல் அகாடமியுடன் இணைந்து தொழில்துறை...

செல்லப்பம்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

செல்லப்பம்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இதனா...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.2026) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

எல்லப்பாளையம் பகுதியில் நாளை (17.07.206) மின்தடை அறிவிப்பு

எல்லப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (ஜூலை 17) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுவத...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உய...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் மற்றும் வரத்து விவரம்

கோவை மாவட்டத்தில் ஆழியார், பரம்பிக்குளம், சோலையாறு அணைகளின் ஜூலை 16 நிலவரப்படி நீர்மட்டம் மற்றும் வரத்து விவரங்கள் வெளிய...