இலங்கை போதை கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா வழக்கு: கைது செய்யப்பட்ட இருவருக்கு ஜாமீன் கிடைத்தும் சிறையில் இருந்து வெளிவருவதில் சிக்கல்!

கோவை: இலங்கை போதை கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு ஜாமீன் கிடைத்தும் ஒரு வார காலமாக சிறையில் இருந்து வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


கோவை: இலங்கை போதை கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா வழக்கில் கைது செய்யப்பட்ட இருவருக்கு ஜாமீன் கிடைத்தும் ஒரு வார காலமாக சிறையில் இருந்து வெளிவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

கோவை காளப்பட்டி பகுதியில் தலைமறைவு வாழ்க்கை நடத்தி வந்த இலங்கை போதை பொருள் கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா உயிரிழந்த விவகாரத்தில் போலி ஆவணங்களைத் தாக்கல் செய்து உடலை பெற்று தகனம் செய்த வழக்கில் அங்கொட லொக்காவின் காதலி என கூறப்படும் இலங்கை பெண் அமானி தாஞ்சி, மதுரையை சேர்ந்த பெண் வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி மற்றும் போலி ஆவணங்கள் தயாரிக்க உதவிய தியானேஸ்வரன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அமானி தாஞ்சி சென்னை புழல் சிறையில் உள்ள வெளிநாட்டவர் பிரிவிலும், தியானேஸ்வரன் பெருந்துறை கிளை சிறையிலும், வழக்கறிஞரான சிவகாமி சுந்தரி கோவை மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை டி.எஸ்.பி ராஜூ தலைமையில் ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 7ம் தேதி கோவை தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி மூவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதனையடுத்து, தியானேஸ்வரன் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்துள்ளார்.

ஆனால், இலங்கைப் பெண் அமானி தாஞ்சி மற்றும் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி ஆகியோருக்கு ஜாமீன் தர யாரும் உத்தரவாதம் அளிக்காததால் இருவரும் சிறையில் இருந்து வெளியே வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, அமானி தாஞ்சிக்கு இருவர் உத்தரவாதம் அளித்துள்ளதாகவும் நாளை அல்லது நாளை மறுநாள் அவர் விடுவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அதேபோல, வழக்கறிஞர் சிவகாமிக்கு ஒருவர் உத்தரவாதம் அளித்துள்ளதாக வழக்கறிஞர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோயம்புத்தூர் மாநகராட்சியில் Census 2027 விழிப்புணர்வு முகாம் தொடக்கம்

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று Census 2027க்கான சிறப்பு விழிப்புணர்வு முகாம் தொடங்கியது. மாமன்ற உறுப...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் ஜூலை 18 அன்று காலை 9 முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும். இ...

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

கோவை மெட்ரோ துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற உள்ளன. இத...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (18.07.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை சூலூர், டி.எம். நக...

திருப்பூர் மாவட்ட அமராவதி மற்றும் திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் 50.56 அடியாகவும், திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் 27.75 அடியாகவும் உள...

கோவை மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு

தென்மேற்கு பருவமழை காரணமாக கோவை மாவட்டத்தில் உள்ள மூன்று முக்கிய அணைகளான ஆழியாறு, பரம்பிக்குளம் மற்றும் சோலையாறு அணைகளின...