கோவை: கோவையில் காவல்துறையினருடன் இணைந்து நடன கலைஞர்கள் நடத்திய கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கோவை மாநகராட்சி சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மேலும், கோவையில் காவல் துறை சார்பிலும் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, கோவை துடியலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட இடையர்பாளையம், துடியலூர், கவுண்டம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் உள்ள நடன கலைஞர்கள் பொது மக்களிடையே கொரானா விழிப்புணர்வை நிகழ்ச்சி நடத்தினர்.

துடியலூர் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் நடன கலைஞர்கள் விநாயகர், கரடி, கொரோனா உள்ளிட்ட வேடங்கள் அணிந்து ஆடி- பாடி கொரோனா விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இந்த நிகழ்ச்சியின் இடையில் கிராமிய கலையான கரகாட்ட நிகழ்ச்சியும் நடைபெற்றது.
அதேபோல, பல்வேறு நடிகர்கள் போல் பல குரலில் பேசி கொரோனா குறித்து மக்களுக்கு எடுத்துத்துரைத்தனர். இந்நிகழ்ச்சியின் இடையே நரிக்குறவர்கள் இன மக்கள் அவர்களின் பாரம்பரிய நடனம் ஆடி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
மேலும், கொரோனாவில் இருந்து நம்மை பாதுகாக்க முகக்கவசம் அணிவது, கைகளை அடிக்கடி சுத்தப்படுத்துவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்டவைகளை தவறாமல் கடைபிடிப்போம் என்று காவலர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.